மயிலாடுதுறை அருகே பங்காளி சண்டை: அண்ணனை அடித்தே கொன்ற தம்பிகள்!
மயிலாடுதுறை அருகே பங்காளிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இரும்பு கட்டையால் தலையில் அடித்து அண்ணனை தம்பிகள் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் 40 வயதான வைத்தியநாதசுவாமி என்பவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் நடைபெற்றது ஒரு குழந்தை உள்ள நிலையில் மனைவியை பிரிந்து தாயுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் இவரின் சித்தப்பா மூர்த்தியின் மகன்களான 32 வயதான திவாகர் மற்றும் 34 வயதான தினேஷ் ஆகியோருக்கு இடையே நீண்ட காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்ததாகவும், இதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் மூவலூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்த திவாகர் மற்றும் தினேஷ் ஆகியோரிடம் வைத்தியநாதசுவாமி மதுபோதையில் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த திவாகர் அருகிலிருந்த இரும்பு கைப்பிடி உடைய வாறுகோலால் வைத்தியநாத சாமியின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் நிலைகுலைந்து போன வைத்தியநாத சாமி தலையில் ரத்தம் சொட்ட சொட்ட பலத்த காயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார். அங்கு அவர் மயங்கி நோயாளிகள் அமரும் இடத்தில் மயக்க நிலையில் சார்ந்துள்ளார். இதனைப் பார்த்து மருத்துவர்கள் அவரை பரிசோதித்ததில் அதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருப்பது தெரியவந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
கஞ்சா பீட்சா ரெடி... புதிய தயாரிப்பை அறிவித்த உணவகம்! இது தான் மயங்க வைக்கும் அறிவிப்பு!
இதனையடுத்து மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து மருத்துவமனைக்கு விரைந்த மயிலாடுதுறை காவல்துறையினர் வைத்தியநாத சாமி உடலை சவக்கிடங்கிற்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் நடைபெற்ற பகுதி குத்தாலம் காவல் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் குத்தாலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வைத்தியநாதசுவாமியை கட்டையால் தாக்கிய அவரது சித்தப்பா மகன்களான திவாகர் மற்றும் தினேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அண்ணன் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Whatsapp Payment: பயனர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது; NPCI 40 மில்லியன் அக்கவுண்ட்களுக்கு அனுமதி!