மேலும் அறிய

8 மாத குழந்தை உள்பட 2 மகள்கள் கொலை.. கணவன் - மனைவி தற்கொலை.. பெங்களூரில் பெரும் அதிர்ச்சி..

பெங்களூரில் தங்களது 8 மாத கைக்குழந்தை உள்பட 2 மகள்களையும் கொலை செய்துவிட்டு கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூரு.. இங்கு வசிப்பவர் வசித்து வருபவர் வீர்அர்ஜூன விஜய். இவருக்கு வயது 31. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். தொழிலுக்காக பெங்களூர் வந்தவர் இங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். இவரது மனைவி ஹேமாவதி. அவருக்கு வயது 29.

8 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் மரணம்:

இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு 6 வயதும், மற்றொரு குழந்தைக்கு 8 மாதமுமே ஆகிறது. விஜய் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் பெங்களூரில் உள்ள கடுகொடியில் உள்ள சாய் கார்டன் அபார்ட்மெண்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக விஜய்யின் வீட்டில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லாமல் இருந்ததால் அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகம் வந்துள்ளது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே விஜய், அவரது மனைவி ஹேமாவதி, அவரது இரண்டு குழந்தைகள் என நான்கு பேரும் சடலமாக கிடந்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், உடனடியாக அவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

நடந்தது என்ன?

ஏ.என்.ஐ.யில் வெளியிட்டுள்ள செய்தியின்படி, விஜய் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களது மகள்கள் இருவரையும் கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், விஜய் தன்னுடைய மனைவியை முதலில் கொலை செய்துவிட்டு ஒருநாளுக்கு பிறகு தன்னுடைய 2 மகள்களையும் கொலை செய்தார் என்றும், அதன்பின்பு தானும் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த மரணங்கள் தொடர்பாக போலீசார் விஜய் மற்றும் ஹேமாவதி இருவரது செல்போன்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த விஜய்க்கு கடன் தொல்லை ஏதும் இல்லை என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இந்த மரணங்கள் கொலையா? தற்கொலையா? விஜய் – ஹேமாவதி இணைந்துதான் குழந்தைகளை கொன்றனரா? ஹேமாவதி, 2 குழந்தைகள் என 3 பேரையும் விஜய்தான் கொலை செய்தாரா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 மாத குழந்தை உள்பட நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெங்களூர் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Suicidal Trigger Warning..

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம்கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

மேலும் படிக்க: Crime: அராஜகம்.. நட்ட நடுரோட்டில் போலீஸ் எஸ்.ஐ. சுட்டுக்கொலை - உத்தரபிரதேசத்தில் கொடூரம்..!

மேலும் படிக்க: Crime: அடக்கொடுமையே! மனைவியின் விரலை கடித்து தின்ற கணவன்; கோபத்தால் வெறிச்செயல்...பெங்களூருவில் ஷாக்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget