அரசு ஊழியர்கள் வீடுகளை குறி வைத்து அடுத்தடுத்து திருட்டு; 100 சவரன் தங்க நகை ‛அபேஸ்’
ஆரணியில் அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்க கூடிய ஓரே பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் போர்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அவுசிங்போர்டு பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் தொடர் திருட்டு சம்பவம் நடந்து வருகின்றன. ஆரணி டவுன் அவுசிங்போர்டு பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் சேகர். இவரது மனைவி செல்வி இவர்களுக்கு 3 மகள் உள்ளனர். சேகர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். 3 மகள்களும் திருமணமாகி சென்றதால் செல்வி வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வி சென்னையில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்.பின்னர் உறவினர் வீட்டில் இருந்து இன்று ஆரணியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார்.அப்போது பீரோவை உடைத்து அதில் இருந்து 25 சவரன் தங்க நகை மற்றும் 20ஆயிரம் ரொக்க பணம் உள்ளிட்ட வெள்ளி பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.
வீட்டில் உரிமையாளர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்து நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதேபோல் அதே குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் அரசு பள்ளி ஆசிரியர் கமலக்கண்ணன் என்பவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியில் சென்றிந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம நபர்களால் பீரோவை உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து செயின் தோடு கம்மல் பிரேஸ்லெட் உள்ளிட்ட 72 சவரன் தங்க நகை மற்றும் 1லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை மர்நபர்கள் கொள்ளையடித்து சென்றிப்பது தெரியவந்துள்ளது.
இதனையொடுத்து 3வது சம்பவமாக அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் பாண்டியன் என்பவர் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இத்தகைய திருட்டு சம்பவம் குறித்து ஆரணி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ஆசிரியர் பாண்டியன் வீட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவை கொண்டும் மாவட்ட கைரேகை நிபுணர்கள் தடயத்தை சேகரித்தும் மோப்ப நாய் மியா வரவழைக்கபட்டு ஆரணி நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆரணியில் அரசு ஊழியர்கள் அதிகம் வசிக்க கூடிய ஓரே பகுதியில் அடுத்தடுத்து 3 வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவத்தால் போர்டு குடியிருப்பு பகுதியில் உள்ள வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் முக்கியச் செய்திகளுக்கு...
‛அவளுக்காக உலகை வாங்கலாம்...’ நயன்தாராவிற்காக கவிதையில் உருகிய நாஞ்சில் சம்பத்!
Meera Mithun: ‛ஏமாற்றும் தலித் மக்கள்’ -‛பிக்பாஸ்’ மீரா மிதுன் சர்சை பேச்சு!