மேலும் அறிய
Advertisement
தருமபுரி, சேலத்தில் தொடர் கொள்ளை; ஆந்திர இளைஞர் கைது - நகை, சொகுசு கார் பறிமுதல்
விசாரணை செய்ததில் பல்வேறு இடங்களுக்கு திருட செல்வதற்கு முன் சாலை விநாயகரை வணங்குவதும், கொள்ளை சம்பவம் முடிந்த பிறகு மீண்டும் சாலை விநாயகரை வந்து வணங்கி விட்டு செல்வதும் தெரியவந்தது.
தருமபுரி மற்றும் சேலத்தில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த இளைஞரை நகர காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 80 சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனம், சொகுசு கார் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி அடுத்த பாரதிபுரம் பகுதியில் கடந்த மாதம் 4ம் தேதி இரவு சிவராமகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கதவை உடைத்து சுமார் 58 மூக்கால் சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 18ம் தேதி அதியமான்கோட்டை அடுத்த எர்ரப்பட்டி பகுதியில் பொது பணி துறை காலனியில் உள்ள அன்பழகன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பூட்டை உடைத்து 12 சவரன் தங்க நகைகளும், சேலம் மாவட்டம் சூரமங்கலம் ஜீவா நகரில் 14 சவரன் தங்க நகைகளும் என மொத்தம் 84 ¼ சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது. தருமபுரி பகுதியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து, தருமபுரி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ரங்கசாமி தலைமையில் தனிப்படை அமைத்து, காவல் துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட சிசிடி பதிவுகளை தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது தருமபுரி நகரில் அதிகப்படியான இடங்களில் குறிப்பிட்ட நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்தது, கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும் தருமபுரி எஸ்வி ரோட்டில் உள்ள சாலை விநாயகர் கோவிலில் இந்த நபர் சாமி தரிசனம் செய்ய வருவதும் தெரியவந்தது. இந்த காட்சிகளை வைத்து, ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த ராயப்பாடி வெங்கையா என்பவரை காவல் துறையினர் அடையாளம் கண்டனர். தொடர்ந்து கண்காணித்து வந்த காவல் துறையினர், இன்று ராயப்பாடி வெங்கையாவை, கைது செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் பல்வேறு இடங்களுக்கு திருடுவதற்கு செல்வதற்கு முன் சாலை விநாயகரை வணங்குவதும், கொள்ளை சம்பவம் முடிந்த பிறகு மீண்டும் சாலை விநாயகரை வந்து வணங்கி விட்டு செல்வதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் தனது சொகுசு காரில் பதுக்கி வைத்திருந்த சுமார் 32 லட்சம் மதிப்பிலான 80 சவரன் தங்க நகைகள் கைப்பற்றினர். மேலும் திருடுவதற்கு பயன்படுத்தி வந்த ஒரு சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கொள்ளையன் மீது ஆந்திரா, தெலங்கானா, தமிழகத்தில் வேலூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
ஜோதிடம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion