உச்சத்துக்கு சென்ற மது போதை: சக நண்பர்கள் தாக்கியதில் கூலி தொழிலாளி பலி!
மயிலாடுதுறை அருகே மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் சக நண்பர்கள் தாக்கியதில் கூலி தொழிலாளி உயிரிழந்த அடுத்து மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கங்கனபுத்தூர் கிராமத்தில் உள்ள பெரிய தெருவில் வசித்து வருபவர் 35 வயதான புனிதன். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான புனிதன் நேற்று பணிகளை முடித்துவிட்டு இரவு சக நண்பர்களுடன் தெருவில் மது அருந்தி உள்ளார். அப்போது ஒருவருக்கொருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது கைகலப்பாக மாறத் தொடங்கியுள்ளது.
பின்னர் மது போதையில் இருந்த புனிதனின் நண்பர்கள் தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே கீழே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் மயிலாடுதுறை காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர் புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட துரை என்பவரின் 27 வயதான மகன் தர்மேந்திரன், பாண்டியன் என்பவரின் 25 வயதான மகன் ரஞ்சித் மற்றும் 21 வயதான பிரசாத் ஆகிய மூவரையும் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மயிலாடுதுறை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இறந்த நபரின் உடலை உடல்கூறு ஆய்வுக்காக மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குடி போதையில் நண்பர்கள் சேர்ந்து சக நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ethirneechal 168 : அடித்துத் துரத்தப்படும் ஜனனியின் அப்பா.. கெளதம் மூலமாக புது பிரச்சனையா? எதிர்நீச்சலில் அடுத்து என்ன?
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 8 பேர் கைது.
மயிலாடுதுறையில் வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் கண்ணன் என்பவர் நேற்று முன்தினம் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 22 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இவர்களில், 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர் ஒருவன் உட்பட 13 பேர் நேற்று முன்தினம் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
எஞ்சிய 9 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சம்பவத்துக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறி கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை வீசிவிட்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தன. அதனடிப்படையில், மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டறிந்து அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று எஞ்சியுள்ளவர்களில் ஒருவரை தவிர்த்த 8 பேரை கைது செய்துள்ளனர். மேலும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 22 பேரில் தற்போது வரை 21 நபர்களை காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணையில் ஈடுபட்ட வருகின்றனர்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண:
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற