படுக்கையில் கிடந்த 87 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - 16 மணி நேரத்திற்குள் துப்புரவு பணியாளர் கைது
மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்ததாகவும், தங்கள் புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர்.
![படுக்கையில் கிடந்த 87 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - 16 மணி நேரத்திற்குள் துப்புரவு பணியாளர் கைது 87 year old physical abuse inside her house in west delhi Sweeper Arrested With in 16 Hours படுக்கையில் கிடந்த 87 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை - 16 மணி நேரத்திற்குள் துப்புரவு பணியாளர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/12/945d96351f485a29de1ca252e6b9405e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டெல்லி திலக் நகரில் 87 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதாட்டியை தாக்கி, அவரது மொபைல் போனுடன் தப்பிச் சென்றதாக போலீஸார் தெரிவித்தனர். மூதாட்டியின் மகள் வாக்கிங் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த நபர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வயதான பெண் அவரைப் பார்த்து விசாரித்தபோது, அவர் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்வதாகவும், வேலைக்காக வீட்டிற்கு அழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். குற்றம் சாட்டப்பட்டவர், மேற்கு டெல்லியில் உள்ள சொசைட்டியில் துப்புரவு தொழில் செய்து வருகிறார். அவருக்கு வயது 30.
டெல்லி காவல்துறை ட்விட்டரில், ‘திலக் நகரில் மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தீர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளி 16 மணி நேரத்திற்குள் பிடிபட்டார். பாதிக்கப்பட்டவரின் மொபைல் போன் அவரிடமிருந்து மீட்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அருகிலுள்ள பகுதியில் வசித்து வருகிறார். ஒரு துப்புரவு செய்பவர். இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கப்பட்டுள்ளது’ எனப் பதிவிடப்பட்டுள்ளது.
மூதாட்டியின் குடும்ப உறுப்பினர்கள், போலீசார் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்ததாகவும், தங்கள் புகாரை ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தனர். அதிகாரிகளால் மறுக்கப்பட்ட குற்றச்சாட்டை, அவர்கள் பெற்ற புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
செல்போன் திருடப்பட்டது குறித்து மகள் புகார் அளித்ததாகவும், திருட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸார் கூறுகின்றனர்.
‘இன்று, பாலியல் வன்கொடுமை என்று புகார்தாரரால் மேலும் கூறப்பட்டுள்ளது. எப்ஐஆர் இல் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு ஆலோசனை மற்றும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன’ என்று டெல்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)