Crime: தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேர் கைது
திருவண்ணாமலையில் தையல் கடைக்காரர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கூலிப்படையினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் கிராமம் சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது ( 55), இவர் திருவூடல் தெருவில் பைனான்ஸ் மற்றும் டெயிலர் கடை வைத்துள்ளார். ஆறுமுகம் தினந்தோறும் காலையில் திருவூடல் தெருவில் உள்ள கடையை திறந்து இறவு 9 மணக்கு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுவார். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி வழக்கம்போல் கடையை காலையில் திறந்து பணியை முடித்துக்கொண்டு இரவு கடையை மூடிவிட்டு ஆறுமுகம் தாமரை நகர் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அவரை பின் தொடரந்து வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஆறுமுகத்தை வழிமடக்கி அரிவாலால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவண்ணாமலை நகர காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஆறுமுகம் மனைவி பிரபாவதி கொடுத்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்திரவின் பேரில் துணை காவல் கண்காணிப்பளார் எஸ்.குணசேகரன் தலைமையில், போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். காவல்துறையினர் தீவிர விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் வயது (40) என்பவர் கூலிப்படையை ஏவி ஆறுமுகத்தை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் பரந்தாமனையும், கூலிப்படையை சேர்ந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூரை சேர்ந்த பாரதி வயது (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெருவை சேர்ந்த தமிழரசன் வயது (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் வயது (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் கொலை செய்ய திட்டம் தீட்டியது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து வெட்டியது, காரில் பாதுகாப்பாக பின்னால் வந்தது என கூலிப்படையினர் 8 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 5 பேரை பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கூலிப்படையை சேர்ந்த திருவண்ணாமலை சாரோனை சேர்ந்த இசக்கியல் வயது (29), விநாயகமூர்த்தி வயது (22), மோசஸ் வயது (22), எடப்பாளையம் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த மணிகண்டன் வயது (32), கோபிநாத் வயது (23) ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை சம்பவத்தின் போது அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.