சூனியக்காரர் என நினைத்து இளைஞர் எரித்துக் கொலை; பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேர் கைது!
உறங்க இடம் தேடிய இளைஞரை சூனியக்காரர் என நினைத்து எரித்துக் கொன்ற பாஜக பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி பிரட்டையூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). இவர் கட்டடங்களுக்கு செண்டரிங் அடிக்கும் பணி செய்த வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் இரவு அவர் தூங்குவதற்காக இடம் தேடி அலைந்தபோது மேட்டுப்பாளையம் பெட்ரோல் நிலையம் உள்ளே சென்று தூங்க முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அவரை அங்கிருந்து கிளம்பும்மாறு கூறியதையடுத்து ஊழியர்களுக்கும் சதீஷ்குமார்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
அப்போது அங்கு வந்த பெட்ரோல் பங்கின் உரிமையாளர்களான மேட்டுப்பாளையம் வழுதாவூர் சாலையை சேர்ந்த ஒய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ராஜேந்திரனின் மகன்கள் ராஜவரதன் (வயது 21) மற்றும் ராமாமவுரியா (வயது 27) ஆகியோர் சதீஷ்குமார் சூனியம் வைப்பவர் போல் இருப்பதாகக் கூறியதுடன், இவர்களுக்கு சூனியம் வைக்க வந்ததாக நினைத்து, அவரிடம் யார் உன்னை அனுப்பியது? என கேட்டு மிரட்டியுள்ளனர். அதற்கு சதீஷ்குமார் பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக நின்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பெட்ரோல் நிலைய ஊழியர்கள் சதீஷ் குமாரை மிரட்டுவதற்காக அவர்மீது பெட்ரோலை ஊற்றியுள்ளனர். மேலும் தீக்குச்சியை பற்றி வைத்துக்கொண்டு உண்மையை சொல்லவில்லை என்றால் கொளுத்திவிடுவோம் என மிரட்டியுள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக தீ சதீஷ்குமாரின் உடலில் பற்றியது. இதில் சதீஷ்குமார் வலி தாங்கமுடியாமல் அலறித் துடித்துள்ளார்.
உடனே பெட்ரோல் நிலைய ஊழியர்கள் தீயை அணைத்துள்ளனர். பின்னர் சதீஷ்குமார் காயங்களுடன் சாலைக்குச் சென்று, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவரிடம் லிப்ட் கேட்டு கதிர்காமம் அரசு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சதீஷ் குமார் அளித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், நண்பர் மற்றும் ஊழியர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடிவந்தனர். அதில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ராஜவரதன், ராஜமவுரியா, குமார், சிவசங்கர் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர். இதில் தலைமறைவாக இருக்கும் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர், மேலும் கைது செய்யப்பட்ட பெட்ரோல் பங்க் உரிமையாளர் ராஜாமவுரியா புதுச்சேரி பாஜக பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : ’கடந்த 5 ஆண்டு கால இன்னல்கள் இந்த ஆட்சியில் தீர்க்கப்படும்’ - சபாநாயகர் செல்வம்