Crime: கடத்தல் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாத விவசாயி அடித்துக் கொலை
ஜமுனாமரத்தூர் அருகே கடத்தி வைக்கும் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாததால் ஆத்திரமடைந்த விவசாயி சரமாரியாக அடித்துக் கொலை செய்த வனவர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
![Crime: கடத்தல் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாத விவசாயி அடித்துக் கொலை 3 people arrested including forester who beat up angry farmer for not helping him hide smuggled sheep Crime: கடத்தல் செம்மரங்களை மறைத்து வைக்க உதவாத விவசாயி அடித்துக் கொலை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/14/d6ff3dfca0c08082aeabd36aff940add1673687962237109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த கீழ்கணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர் மகன் ராமதாஸ்(28), விவசாயி. இவர், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு நிலத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராமதாஸ் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை ஜமுனாமரத்தூர் அருகே உள்ள வேடகொல்லைமேடு அமிர்தி சாலையோரம் ராமதாஸ் ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக ஜவ்வாது மலை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் விவசாயி ராமதாஸ் கழுத்து இருக்கியும் சரமாரியாக தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ராமதாஸின் மனைவி சசிகலா ஜமால் மாத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதனை தொடர்ந்து போளூர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் துணை ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல் துறையினர் அடங்கிய குழுவினர் கொலையாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் கொலையாளியான ராமதாஸின் நண்பர்கள் யார் செல்போனில் ராமதாசுடன் அதிகமாக யார் உரையாடி உள்ளார் என ஆய்வு செய்தனர். அதில் அவரது நெருங்கிய நண்பரும் ஜவ்வாது மலையில் தனசாகுமாக பணிபுரியும் ராஜாராம் என்பவரிடம் அதிகமாக தொலைபேசியில் பேசியது தெரியவந்தது. ஜமுனாமரத்தூர் மார்க்கெட்டில் நின்று கொண்டிருந்த வனாத ராஜாராமை காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அனைத்து வந்து விசாரணை நடத்தினர் அதில் ராமதாசை கொலை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 'ராஜாராம் வனப்பகுதியில் வெட்டிக்கடத்தும் செம்மரக்கட்டையை மறைத்து வைப்பதற்கு இடம் கேட்டுள்ளார்.
ஆனால், ராமதாஸ் இடம் தர மறுத்துவிட்டாராம். இதனால் அவரை தீர்த்து கட்டி விட வேண்டும் என கூறியுள்ளார். தொடர்ந்து சம்பவத்தன்று அணைக்கட்டு அருகே உள்ள நிலத்திலிருந்து பேருந்தில் கீழ்க்கணவாயூர் வந்து இறங்கிய ராமதாசை வனவர ராஜாராம் மற்றும் அவரது நண்பர்கள் காரில் கடத்திக்கொண்டு ஆரணி அடுத்த பூச்சி மலைக்குப்பம் பகுதிக்கு சென்றுள்ளனர் அங்கேயே விவசாய ராமதாசை அடித்து கொலை செய்து அவர்கள் அதே காரிலேயே சடலத்தைக் கொண்டு வந்து அமர்திய அருகே வேடக்கொல்லை மேட்டு சாலையோரம் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் செய்யாறில் உள்ள தனது நண்பர்களான குகன்(20), கிருபாகரன்(26) ஆகியோரை வரவழைத்து ராமதாசை காரில் கடத்திக் சென்று அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, வனவர் ராஜாராம், அவரது நண்பர்கள் குகன், கிருபாகரன் ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)