மேலும் அறிய

தற்கொலை செய்ய தடையாக இருந்த மனைவி.. தீவைத்து கொளுத்திய கணவன்..

தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து  தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார்.

தெலங்கானாவில் தனது தற்கொலை முடிவுக்கு மனைவி தொடர்ந்து தடையாக இருந்ததால் கணவர் செய்த விபரீத காரியம் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. 

தெலங்கானாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்மம் மாவட்டத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள  திருமலையபாலம் பகுதியில் நாகபூஷணம் என்பவர் தனது மனைவி ஜெயம்மாவுடன் வசித்து வருகிறார். நாகபூஷணம் தோட்டக்காரராக வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நல பிரச்னை இருந்து வந்துள்ளது. இதற்காக பல இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எதுவும் சரியாகவில்லை. இப்படியான நிலையில் தான் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாகபூஷணத்திற்கு சிறுநீரக பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனால் கடும் மனவேதனை அடைந்த அவர், மூன்று முறை பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் மனைவி ஜெயம்மா நாகபூஷணத்தைக் காப்பாற்றி மீண்டும் உடல்நலத்தை மீட்பதற்கு போராடியுள்ளார்.  நாளுக்கு நாள் நாகபூஷணத்தின்உடல்நலக் குறைபாடுகள் அதிகரித்து கொண்டே வந்துள்ளது. அதேசமயம் மனைவி தனக்காக கஷ்டப்படுவதைக் கண்டு அவர் மிகவும் நொந்து போனார். 

இப்படியான நிலையில் தன்னுடைய தற்கொலை முடிவை தடுத்து  தனக்கு இடையூறாக இருக்கும் மனைவியைக் கொன்று பின்னர் தற்கொலை செய்துக்கொள்ள நாகபூஷண் விபரீத முடிவு செய்தார். தனது திட்டத்தின்படி நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் மனைவி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். ஆனால் சற்றும் தாமதிக்காத நாகபூஷண் தன்னிடம் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

வீட்டில் இருந்து நள்ளிரவில் அலறல் சத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்து புகை மண்டலமாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள்  நாகபூஷணத்தின் மகனுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த மகன், நாகபூஷணம் மற்றும் ஜெயம்மாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  இதில் நாகபூஷணம் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். ஜெயம்மா  மட்டும் படுகாயத்துடன் தொடர்ச்சியாக கம்மம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து திருமலையபாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

(தற்கொலை என்பது எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு கிடையாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ அல்லது தற்கொலை செய்துக் கொள்ளும் எண்ணம் உண்டானாலோ ஆலோசனைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 , மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800 599 0019)

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Ather Konarc: ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
ஒரே சார்ஜில் 200 கிமீ மைலேஜ்.! ஏதர் Konarc லாஞ்ச்-க்கு முன் கசிந்த விவரங்கள்; 6 வேரியண்ட்டுகளா.?
Toyota Hyryder CNG on EMI: மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
மைலேஜ் கிங் டொயோட்டா Urban Cruiser ஹைரைடர் CNG; ரூ.1 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
Embed widget