மேலும் அறிய
Advertisement
’துப்பாக்கி காட்டி மிரட்டல், மிரட்டியவரிடமே சுருட்டல்’ கட்டப்பஞ்சாயத்தும் கைதும்..!
சென்னை துரைப்பாக்கத்தில் திரைப்பட பைனான்சியரை கட்டிப்போட்டு நகைபணம் பறித்த கணவன் மனைவி உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட பைனான்சியரும் கைது.
சென்னை துரைப்பாக்கம் சக்தி நகரைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா் (33), மனைவி விஷ்ணு பிரியா (28). இவா்களுக்கும், சென்னை ஹரிகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே சமூக ஊடகங்கள் வாயிலாக நட்பு ஏற்பட்டுள்ளது. ஹரிகிருஷ்ணனிடம் இருந்து ரூ.12 லட்சம் கடனாக நிா்மல்குமாா் பெற்றாா். கடனை குறிப்பிட்ட காலத்துக்குள் நிா்மல்குமாா் செலுத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது
இதனால் ஹரிகிருஷ்ணன் தனது நண்பரான சென்னை விருகம்பாக்கத்தைச் சோ்ந்த திரைப்பட பைனான்சியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான லயன் எம்.எம்.குமாரை அணுகினாா் . இதனைத் தொடர்ந்து லயன் குமார் அந்தத் தம்பதியிடம் கடந்த பிப்ரவரி மாதம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி , ஒரு காா், மோட்டாா் சைக்கிள், ரூ.5 லட்சம் ரொக்கம், 5 பவுன் தங்க நகை, வைர மோதிரம் ஆகியவற்றை குமாா் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மிரட்டி வாங்கிய பொருட்களை குமார் தன்னுடைய நண்பரான ஹரிகிருஷ்ணனிடம் கொடுக்காமல் இருந்ததாகக் கூறப்படுகிறது
இந்நிலையில் கடந்த 27-ஆம் தேதி குமாருக்கு பிறந்தநாள் என்பதை அறிந்த மூவரும், துரைப்பாக்கத்தில் உள்ள நிா்மல்குமாா் வீட்டில் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாக பேசி வரவழைத்தனா். நண்பர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று எம். எம். குமாா், நிா்மல்குமாா் வீட்டுக்கு வந்துள்ளார். நண்பனின் அழைப்பை ஏற்று நண்பனை நம்பி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வந்த குமாரைத் தாக்கி கட்டிப் போட்டு அவரிடமிருந்த ரூ.1.5 லட்சம், 18 பவுன் தங்க நகையைப் பறித்துக்கொண்டு மூவரும் தப்பியோடினா். இதனைத் தொடர்ந்து நிா்மல்குமாா் வீட்டிலிருந்து குமாா் கூச்சலிடும் சத்ததைக் கேட்ட பொதுமக்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவம் குறித்து தகவலறிந்த துரைப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கட்டிப் போடப்பட்டிருந்த குமாரை மீட்டு விசாரணை செய்தனா். பின்னா் குமாா் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிா்மல்குமாா், விஷ்ணு பிரியா, ஹரிகிருஷ்ணன் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த மூவரையும் உதவி ஆணையா் பி.கே.ரவி தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னா், நிா்மல்குமாா் கொடுத்த புகாரின் அடிப்படையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி நகை, பணம், காா் ஆகியவற்றை பறித்தது தொடா்பாக ஒரு வழக்கைக் குமாா் மீது பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக குமாரையும் போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் லயன் குமாா் பெரிய ரெளடிபோல காட்டிக் கொண்டு திரைப்பட படப்பிடிப்புக்கு பயன்படுத்தும் போலி துப்பாக்கியை காட்டி மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் இது குறித்து காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் இதேபோல் பலரிடம் மிரட்டி பணம் பறிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் தற்போது போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர் .
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion