திண்டிவனம்: இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு: பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் : திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில் இளநீர் ஏற்றி வந்த லாரி இருசக்கர வாகனம் மீது மோதியதில் 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொள்ளாச்சியில் இருந்து சென்னைக்கு இளநீர் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியை பொள்ளாச்சியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 59) என்பவர் ஓட்டி வந்தார்.
லாரியானது திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்த போது திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் சென்ற உத்தர பிரதேசத்தை சேர்ந்த இன்தசார் (வயது 46), இவரது மகன் திஷாந்த் (வயது 14) மற்றும் அசேன் (வயது 30) ஆகிய 3 பேரும் சென்றனர். அப்போது ஜகாம் பேட்டை வளைவில் சென்ற போது எதிரில் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது லாரி அதி வேகமாக மோதியது. இதில் பைக்கில் வந்த மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் இன்தசார், அசேன் ஆகிய இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் பலி- சிசிடிவி காட்சி.@abpnadu pic.twitter.com/wM8Db2omph
— SIVARANJITH (@Sivaranjithsiva) April 14, 2022
படுகாயமடைந்தவர் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள். தற்போது வாகன விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய சம்பவத்தில் 2 பேர் சம்பவ இடத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்