மேலும் அறிய
Advertisement
Crime : சூதாட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்த தர்மபுரி போலீஸார்.. மொத்தம் 15 பேர் கைது! நடந்தது என்ன?
அரூர் அடுத்த கோட்டப்பட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.5.77 லட்சம் பணம், கார் 2 இருசக்கர வாகனம் 6 செல்போன் 21 பறிமுதல்.
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள பெரிய ஏரி பகுதியில் சூதாட்டம் நடைபெறுவதாக அரூர் டிஎஸ்பி புகழேந்தி கணேஷிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து தனிப்படை காவலர்களை கண்காணிக்க உத்தரவிட்டார். இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள் சுந்தரமூர்த்தி தலைமையில், சக்திவேல், கமலநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சூதாட்டம் ஆடியவர்களை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையில் தனிப்படையினர் சூதாட்டம் ஆடியவர்களை சுற்றி வளைத்தனர்.
அப்பொழுது காவல் துறையினரை கண்டதும், அங்கும் இங்கும் ஓடினர். ஆனால் காவல் துறையினர் அவர்களை மடக்கி பிடித்தனர். இதனை தொடர்ந்து கோட்டப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, நடத்திய சோதனையில் ரூபாய் 5.77 லட்சம் பணம் இருந்தது. மேலும் அவர்களிடமிருந்து 2 கார்கள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 21 செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து பணம் வைத்து சூதாடிய 15 பைரை கோட்டப்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இலட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் ஆடியவர்களை சுற்றி வளைத்து, காவல் துறையினர் கைது செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து, மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 6,500 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரிப்பு.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பொழிந்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் தமிழக எல்லையன பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து தொடர்ந்து ஒரு வாரமாக சரிந்து நேற்று காலை வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 6,500 கன அடியாக குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் நீர்வரத்து அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 6,500 கன அடியிலிருந்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி, சினி அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது. மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால், நீர்வரத்து சரிய வாய்ப்புள்ளது என மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion