மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

RatioN Card KYC: நெருங்கும் டெட்லைன் - ரேஷன் அட்டை முடங்கும் அபாயம், இ-KYC ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?

RatioN Card KYC: ரேஷன் அட்டைக்கான E-KYCயை ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

RatioN Card KYC: ரேஷன் அட்டைக்கான E-KYCயை அப்டேட் செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 31ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.

குடும்ப ரேஷன் அட்டைகள்:

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அரசி, கோதுமை மற்றும் சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் அரசால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இதில் பலனடைய ரேஷன் அட்டைகள் அவசியமாகும். அதோடு, அரசின் பல்வேறு திட்டங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையாகவும் ரேஷன் கார்ட் உள்ளது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டைகளை அரசு விநியோகித்துள்ளத. இந்நிலையில், போலி ரேஷன் அடைகளின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஒருவருக்கே இரண்டு முதல் 3க்கும் மேற்பட்ட அட்டைகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உணவுப்பொருட்களை பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

போலி ரேஷன் அட்டைகள்:

இதனால் தகுதியான குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பது தடைபட்டு விடுகிறது. அதன் காரணமாக ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைக்கும் வகையில் கடந்த 6 மாதங்களுக்கு மேல் உணவு பொருட்கள் வாங்காதவர்களின் பெயர்களை நீக்க மத்திய அரசு திட்டமிட்டது. மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் கார்டு வைத்திருக்க முடியும். ஆனால் அரசு ஊழியர்கள் கூட இந்த கார்டை பயன்படுத்தி மானிய விலையில் உணவு பொருட்கள் வாங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  இதனை தவிர்ப்பதற்காகவும், கட்டுப்படுத்துவதற்காகவும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது தகவல்களை(KYC) பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது.

போலி அட்டைகளை ஒழிக்க திட்டம்:

போலி ரேஷன் அட்டைகளை ஒழிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் கார்டுகள் செயல்பாட்டில் உள்ளதா அல்லது நீக்கப்பட்டதா என்பதை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். KYC தகவல்களைப் புதுப்பிக்காததால் பல கார்டுகள் செயலிழக்க வாய்ப்புள்ளது, எனவே உங்கள் கார்டின் நிலையை TNPDS இணையதளத்தில் சரிபார்த்து உறுதிசெய்து கொள்ளவும்.

அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம்:

அதன் படி, அக்டோபர் மாத இறுதிக்குள், ரேஷன் அட்டை பயனர்கள் தங்களது விவரங்களை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து நியாயவிலைக்கடைகளில் விரல் ரேகை மூலம் ரேஷன்கார்டு வைத்திருப்பவர்கள் அப்டேட் செய்து வருகின்றனர்.  தங்களது விவரங்களை சமர்பிக்காதவர்கள் பெயர்கள் ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கவும், போலி பெயர்களை ஒழிக்கவும்,  இறந்தவர்களின் பெயர்களை நீக்கவும் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

ஆதார் எண் இணைப்பு- ஆன்லைன் அப்பேட் எப்படி.?

TNPDS பக்கத்திற்கு சென்று ரேஷன் கார்டு நிலை என்ற விருப்பத்தை கிளிக் செய்தால். குடும்ப அட்டை செயல்பாட்டில் இருந்தால் ஏற்கனவே ஆதார் இணைக்கப்பட்டிருக்கலாம். அப்படி இல்லாமல் இணைப்பு ஆதார் செயலிழக்கப்பட்டது என தோன்றினால். அதன் மீது கிளிக் செய்து ரேஷன் கார்டு எண்ணை பதிவிட வேண்டும். தொடர்ந்து ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிக்கு ஓடிபி வரும். இதனை பதிவு செய்தால் வெற்றிகரமாக அப்டேட் நிகழ்வு முடியும். அதே நேரத்தில் வீட்டின் அருகே உள்ள நியாயவிலைக்கடைக்கு சென்றால் கை விரல் ரேகை மூலம் அப்டேட் எளிதாக செய்யப்பட்டு விடும். நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்றும், எந்த மாநிலத்தைச் சேர்ந்த நபரும் தங்களது KYC விவரங்களை அப்டேட் செய்யலாம்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singh

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
IPL Auction 2025 LIVE: அண்ணன் வரார் வழியவிடு! மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரவி அஷ்வின்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget