மேலும் அறிய

Tata : டிஜிட்டல் பரிவர்த்தனை தளத்தில் களம் இறங்கும் டாடா குழுமம்..

டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையில் கால்பதிக்கும் டாடா குழுமம்

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான துறைகளில் ஒன்று டிஜிட்டல் பேமெண்ட் சேவை.  ஏற்கனவே பேடிஎம், போன்பே, கூகுள் பே, அமேசான் பே எனப் பல நிறுவனங்கள் டிஜிட்டல் பேமண்டில் கொடி கட்டி பறக்கிறது. இந்நிலையில், டாடா குழுமம் டிஜிட்டல் பேமெண்ட்ஸ் துறையிலும் தடம் பதிக்க உள்ளது.

இந்தியாவின் வர்த்த சாம்ராஜ்ஜியத்தின் எவர்க்ரீன் ராஜாவான டாடா கடந்த 5 வருடத்தில் டிஜிட்டல் வர்த்தகத் துறையில் அதிகப்படியான வர்த்தகத்தை உருவாக்கியுள்ளது. இந்த வேளையில் டிஜிட்டல் வர்த்தகச் சந்தையின் மிக முக்கியமானதாகக் கருதப்படும் டிஜிட்டல் பேமெண்ட் துறையில் டாடா குழுமம் இறங்க உள்ளது.

சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகப் பிரிவு மிகவும் குறைந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் யூ.பி.ஐ. தளத்தின் உதவியுடன் பேமெண்ட் சேவையை அளிக்க  தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்திடம்(NPCI- National Payments Corporation of India ) ஒப்புதல் பெற டாடா குழுமம் விண்ணப்பித்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது,

டாடா குழுமத்தின் டிஜிட்டல் வர்த்தகத்திற்குப் பயன்படும் இந்த டிஜிட்டல் பேமெண்ட்-யை உருவாக்க டாடா டிஜிட்டல் நிறுவனம் ஐசிஐசிஐ வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இந்தியாவில் யூ.பி.ஐ. பயன்பாடுகள், குறிப்பாக பெரிய பரிவர்த்தனை அளவுகளைக் கையாளும் போது, ​​அதில் ஏற்படும் இடர்பாடுகளைப் பகிர்ந்து கொள்ள பல வங்கிகளுடன் பணிபுரிவதைத் தேர்வு செய்கின்றன நிறுவனங்கள். ஃபோன்பே, கூகுள் பே நிறுவனங்களும் வங்கிகளின் உதவியுடன்  யூ.பி.ஐ. பேமெண்ட்ஸ் சேவையை அளித்து வருகிறது.  இதே வழியை டாடா-வும் பின்பற்ற இருக்கிறது. உதாரணமாகக் கூகுள் பே இந்தியாவில் தனது டிஜிட்டல் பேமெண்ட் சேவையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்களின் மூலம் வழங்கி வருகிறது.

தேசிய பணப் பரிவர்த்தனை அமைப்புகளின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் யூ.பி.ஐ.  மொத்தம் 4.52 பில்லியன் பரிவர்த்தனைகளை பதிவு செய்துள்ளது.

டாடா குழுமத்தைப் பொறுத்தவரை, யூ.பி.ஐ. நெட்வொர்க்கில் நுழைவது என்பது அதன் லட்சிய ஆன்லைன் வர்த்தக வளர்ச்சியின் இயல்பான நீட்டிப்பாகும். இதன் மூலம் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்தலாம். உதாரணமாக, அமேசான் இந்தியா தனது சொந்த யூ.பி.ஐ. சேவையை கொண்டுள்ளது. இதன் மூலம் தனது பயனர்களுக்கு அமேசான் கேஷ்பேக் மற்றும் பிற சலுகைகளை வழங்குவதற்கு எளிதாக இருக்கிறது.

டிஜிட்டல் பேமண்ட்ஸ் துறையில் டாடா குழுமத்திற்கு அனுமதி வழங்கப்படுதால், யூ.பி.ஐ. இன் சந்தைக்கு கூடுதல் பரிமாணத்தைச் சேர்க்கும். இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனையின் பயன்பாடு அதிகரிக்கும். ஆனால் NPCI, புதிதாக டிஜிட்டல் பேமண்ட்ஸ் சந்தையில் களம் இறங்குவர்கள் முதல் மூன்று மாதங்களுக்கு மொத்த பரிவர்த்தனையில் 30% க்கு மேல் செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், இதிலிருந்து  ஃபோன்பே, கூகுள் பே ஆகிய நிறுவனங்களுக்கு 2022 ஆம் ஆண்டு இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

யூ.பி.ஐ. மூலம் பெரும் வளர்ச்சி கண்ட நிறுவனம் வாட்ஸ் அப். இந்த நிறுனத்திற்கு தேசிய பணப் பரிவர்த்தனை கழகம், கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதித்த 20 மில்லியன் பயனர்களில் இருந்து 40 மில்லியன் பயனர்களாக உச்ச வரம்பை அனுமதித்தது  குறிப்பிடத்தக்கது.

Aishwaryaa Rajini: “உலகம் மாறிட்டேதான் இருக்கும்... LOVE தான் முக்கியம்” - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Kanimozhi Speech in parliament : வடக்குக்கு ₹1300 கோடி...தெற்குக்கு ₹59 கோடி... கொதித்த கனிமொழி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் 2 பேர் கைது
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
Embed widget