Stock Market Update: இன்று ஏற்றத்துடன் தொடங்கி ஏற்றத்துடன் முடிவடைந்த பங்குச் சந்தை ...லாபத்தில் டாடா, கனரா வங்கி
இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன

இன்று மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ்,212.88 புள்ளிகள் அதிகரித்து 59,756.84 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 80.60 புள்ளிகள் அதிகரித்து 17,736.95 புள்ளிகளாக உள்ளது.
உலகளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை காரணமாக பெரும் வீழ்ச்சியில் சென்றிருந்த பங்குச் சந்தைகள், கடந்த சில தினங்களாக ஏற்றம் கண்டு வருவதால், முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவனங்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளன.
It is collective responsibility of states and Centre to effectively tackle trans-border crimes: Home Minister Amit Shah
— Press Trust of India (@PTI_News) October 27, 2022
லாபம்- நஷ்டம்
ஓஎன்ஜிசி, பெல், அதானி டாடா, வேதாந்தா, நால்கோ,ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, கெயில், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன
டிவிஎஸ் மோட்டார்ஸ், எல்.அண்ட். டி,பஜாஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன.
பொருளாதரம் தேக்கம்:
உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. அதன் காரணமாக பணவீக்கம் அதிகரித்தது. மேலும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதத்தை உயர்த்தியது.
இதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அந்நிய முதலீட்டாளர்கள், வெளியே செல்ல ஆரம்பித்தனர். இதனால் டாலருக்கான பற்றாக்குறை அதிகரித்தது. டாலருக்கு தேவை இருந்தும், பற்றாக்குறை காணப்பட்டதால் டாலரின் மதிப்பு உயரத் தொடங்கியது. இதனால் இந்திய ரூபாய் பெரும் வீழ்ச்சியடைந்து ரூ. 83 ஐ கடந்து சென்றது.
இதனால், கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை டாலர்களில் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு உயர்வு:
இந்நிலையில், கடந்த சில தினங்களாக பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. இதையடுத்து ரூபாய் மதிப்பு, டாலருக்கு எதிராக சற்று வலுவடைந்து வருகிறது.
Rupee rises 31 paise to close at 82.50 (provisional) against US dollar
— Press Trust of India (@PTI_News) October 27, 2022
இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் அதிகரித்து 82.50 என்ற அளவில் உள்ளது. கடந்த சில தினங்களாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 83 ரூபாயை தாண்டிய நிலையில், ரிசர்வ் வங்கியின் இருப்பிலிருந்து டாலர் பயன்படுத்தப்பட்டதால் ரூபாய் மதிப்பு ரூ.83ஐ தாண்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இந்திய பங்குச் சந்தைகளில் இந்தியர்கள் முதலீடு செய்வது சற்று வேகமெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதன் காரணமாகவும் இந்திய ரூபாய் ரூ. 83 ஐ தாண்டாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், 80-க்கு மேலாக ரூபாய் மதிப்பு உயர்ந்திருப்பதால் இந்தியர்களுக்கு, சற்று கவலை நிலையையே ஏற்படுத்தியுள்ளது
Also Read: Gold Rate Today: நகை வாங்க தயாரா மக்களே! குறைந்தது தங்கம்.. வீழ்ந்தது வெள்ளி... இன்றைய விலை நிலவரம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

