Stock Market: ரிலையன்ஸ் பங்கு மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு - சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிவு!
Stock Market: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 600.00 அல்லது 0.73% புள்ளிகள் குறைந்து 71,029.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 143.30 அல்லது 0.66% புள்ளிகள் குறைந்து 21,600 ஆக வர்த்தகமாகியது.
பங்குச்சந்தையில், 1468 பங்குகள் சரிவுடனும் 1534 பங்குகள் ஏற்றத்துடனும் 81 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்கிறது. வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை சரிந்தது. ஆசிய பங்குச்சந்தையும் சரிவுடனே தொடங்கி வர்த்தகம் ஆகிவருகிறது. அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததை விட நிலமை இருப்பதால் பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் இருப்பும் அதிகரித்திருப்பதால் எண்ணெய் விலை சரிந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா, ஆதித்யா பிர்லா ஃபேசன் மற்றும் ரீடைல், க்ராம்டன் க்ரீவ்ஸ் கன்ஸ்யூமர் எலக்ட்ரிக்கல், க்லாண்ட் ஃபார்மா, க்லென்மார்க் பார்மா, முத்தூட் ஃபினான்ஸ், நாட்கோ பார்மா, சன் டிவி ரெட்வோர்க் உள்ளிட்ட 66 நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டு வளர்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது.
பாரத் பெட்ரோலியம் 68.4 லட்சம் பங்குகளை .விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது. ரூ.595.50 ஆக ஒரு பங்கு விற்பனை செய்யப்படுகிறது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
பி.பி.சி.எல்., கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, ஐ.டி.சி., ஓ.என்.ஜி.சி.,அதானி எண்டர்பிரைசிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., பவர்கிரிட் கார்ப், அப்பல்லோ மருத்துவமனை, அதானி போர்ட்ஸ்,ஐ.சி.ஐ..சி.ஐ. வங்கி, டாடா மோட்டர்ஸ், பஜாஜ் ஃபினான்ஸ், டாடா ஸ்டீல், மாருது சுசூகி, கோடாக் மஹிந்திரா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
டெக் மஹிந்திரா, சிப்ளா, இன்ஃபோசிஸ், சன் பார்மா, டி.சி.எஸ், ஹெச்.டி.எஃப்.சி. க்ரேசியம்,. விப்ரோ,டிவிஸ் லேப்ஸ், அல்ட்ட்ராடெக் சிமெண்ட்,டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, பாஃப்ரதி ஏர்டெல், ஹீரோ மோட்டர்கார்ப், ஈச்சர் மோட்டர்ஸ், [பிரிட்டானியா, கோடக் மஹிந்திரா, ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
ரிலையன்ஸ் பங்கின் விலை ரூ.2,930 ஆக உள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக ரிலையன்ஸ் பங்கில் விலை அதிகரித்து வருகிறது. டாலர் மதிப்பு மூன்று மாதங்களில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது,.