Share Market : வாரத்தின் முதல் நாள்...ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை... லாபத்தில் டி.சி.எஸ், அப்போலோ..
Share Market : இந்திய பங்குச்சந்தையானது இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கி உள்ளது.
Share Market opened : இந்திய பங்குச்சந்தை இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.
இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தமாகி வருகிறது. மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 360.17 புள்ளிகள் உயர்ந்து 60,260.54 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 113.90 புள்ளிகள் உயர்ந்து 17,973.35 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபம் - நஷ்டம்
ஹின்டல்கோ, டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, விப்ரோ, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், எம்எம், பிபிசிஎல், அதாணி எட்டர்பிரிஸ், லார்சன், அப்போலோ மருத்துவமனை, அல்ட்ரா டெக் சிமெண்ட், சிப்ளா, ஐடிசி, இன்போசிஸ், என்டிபிசி, ஹிரோ மோட்டாகோர்ப், எச்டிஎஃப்சி, கிராசிம், பஜாஜ் ஆட்டோ, கோடக் மகேந்திரா, நெஸ்டீலே, பிரிட்டானியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன.
டெட்டன் கம்பெணி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.
முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி
ஆண்டின் முதல் வாரத்தில் அதாவது கடந்த வாரம் பங்குச்சந்தையானது பலத்த அடிவாங்கியது. இதனால் முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது. ஆண்டின் முதல் வாரத்தில் பங்குச்சந்தையில் சென்செகஸ், நிப்ஃடி 2 சதவீதம் சரிந்ததாக கூறப்படுகிறது. அதாவது, மும்மை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,141 புள்ளிகளையும், தேசிய பங்குச்சந்தையில் நிப்ஃடி 242.45 புள்ளிகளையும் இழந்துள்ளதாக தெரிகிறது. அடுத்த வாரமும் இந்த நிலையே நீடிக்கும் என்ற பயத்திலே முதலீட்டாளர்கள் இருந்தனர்.
ஆனால், வாரத்தில் முதல் நாளான இன்று பங்குச்சந்தையில் சென்செகஸ் 300 புள்ளிகளும், நிப்ஃடி 136 புள்ளிகளும் உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.