Share Market:தனியார் வங்கிகளால் சரிந்த இந்திய பங்கு சந்தை...சற்று கை கொடுத்த பொது துறை வங்கிகள்...
உலக பொருளாதார மந்தநிலை அச்சத்தையொட்டி, வார இறுதி நாளான இன்று, இந்திய பங்கு சந்தை சரிவுடன் முடிவடைந்தது.
இன்றையை நாள் முடிவில், ஏற்றத்துடன் தொடங்கிய பங்கு சந்தை, வார இறுதியில் சரிவுடன் முடிவடைந்தது. இந்நிலையில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 293.14 புள்ளிகள் சரிந்து 60,840.754 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 85.70 புள்ளிகள் சரிந்து 18,105.30 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது. இது, முதலீட்டாளர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Sensex declines 293.14 points to end 2022 at 60,840.74; Nifty dips 85.70 points to 18,105.30
— Press Trust of India (@PTI_News) December 30, 2022
லாபம் - நஷ்டம்:
நிப்டி 50ல் உள்ள 50 நிறுவனங்களில், 32 நிறுவனங்கள் சரிவிலும், 18 நிறுவனங்கள் ஏற்றத்திலும் காணப்பட்டன. அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பிரிட்டாணியா, ஏர்டெல், சிப்லா, லார்சன் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவை கண்டன.
எஸ்.பி.ஐ, சன் பார்மா, டாடா மோடார்ஸ், டாடா ஸ்டீல், டெக் மகேந்திரா, டைட்டான், விப்ரோ, ஓ.என்.ஜி.சி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டன.
Sensex climbs 257.05 points to 61,390.93 in early trade; Nifty advances 73.7 points to 18,264.70
— Press Trust of India (@PTI_News) December 30, 2022
இன்றைய நாள் தொடக்கத்தில், மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 257.05 அதிகரித்து 61,390.93 ஆகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 73.7 புள்ளிகள் அதிகரித்து 18,264.70 புள்ளிகளாகவும் வர்த்தகமானது.
தாக்கம்:
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வெளிநாட்டு மத்திய வங்கிகளானது தொடர்ந்து வட்டி விகிதத்தை அதிகரித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் 10 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், இதுவும் பங்குச்சந்தைகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதுமட்டுமின்றி, சீனா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கமானது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலகின் 2-வது மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட சீனாவில் கொரோனா அதிகரித்து வருவதால், முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ரூபாயின் மதிப்பு:
இந்நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பானது 15 காசுகள் உயர்ந்து 82.72 ரூபாயாக உள்ளது.