சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 3.12 கோடி ரூபாய் அபராதம் விதித்த செபி.. விசாரணை விவரம் என்ன?
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த அபராதத்தை சித்ரா ராமகிருஷ்ணா செலுத்தத் தவறியதை அடுத்து இந்த நோட்டீஸை தற்போது அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது.
பங்குச் சந்தையில் நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான வழக்கில் ரூ.3.12 கோடி செலுத்துமாறு என்எஸ்இயின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு கேபிடல் மார்க்கெட் ரெகுலேட்டரான செபி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை 15 நாட்களுக்குள் செலுத்துமாறு செபி வலியுறுத்தியுள்ளது.
இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் விதித்த அபராதத்தை சித்ரா ராமகிருஷ்ணா செலுத்தத் தவறியதை அடுத்து இந்த நோட்டீஸை தற்போது அந்த நிறுவனம் அனுப்பியுள்ளது.
முன்னதாக, தேசிய பங்குச்சந்தை பரிமாற்றம் எனப்படும் என்.எஸ்.இ.யின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்தவர் சித்ரா ராமகிருஷ்ணன். இவர் தற்போது அந்த பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இந்த நிலையில், இவர் என்.எஸ்.இ.வின் சி.இ.ஓ.வாக பொறுப்பு வகித்தபோது இணை இருப்பிட மோசடி மற்றும் பங்குச்சந்தைகளை கையாளுதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த 2018ம் ஆண்டு என்.எஸ்.இ.யின் சர்வர் கட்டமைப்பை தவறாக பயன்படுத்தியதாக கூறி இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த வழக்கின்கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வரை தவறாக பயன்படுத்திய தரகர்களுக்கு சந்தைத் தரவின் முன்னுரிடைம அணுகலை வழங்க சேவையகம தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சித்ரா ராமகிருஷ்ணன் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார். ஆனால், டெல்லி நீதிமன்றம் அவரது முன்ஜாமீன் மனுவை ரத்து செய்தது. சித்ரா ராமகிருஷ்ணன் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் முழு உண்மையை வெளிக்கொணர அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று வாதிட்டதாலும் அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்ரா ராமகிருஷ்ணனின் ஆலோசகராக செயல்பட்ட ஆனந்த் சுப்ரமணியத்தை போலீசார் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்ரா ராமகிருஷ்ணனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கடந்த நான்கு ஆண்டுகளாக சி.பி.ஐ. இந்த வழக்கில் செயலற்று இருந்ததாகவும் கூறியது.
இவர் மீதான புகார்கள் என்ன?
இமயமலையில் வசிக்கும் முகம் தெரியாத ஆன்மீக சாமியார் ஒருவருடன், பங்குச் சந்தையின் நிதிக் கணிப்புகள், வணிகத் திட்டங்கள் மற்றும் போர்டு நிகழ்ச்சி நிரல் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாக புகார் சித்ரா ராமகிருஷ்ணன் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2013 முதல் 2016 இடைப்பட்ட காலத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருந்தார் சித்ரா இராமகிருஷ்ணன். தொடர்ந்து தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து விலகினார். இமயமலையில் வசிக்கும் ஆன்மீக சாமியாரின் செல்வாக்கின் கீழ் சித்ரா ராம்கிருஷ்ணா எடுத்த முடிவுகளில், எந்த மூலதன சந்தை அனுபவமும் இல்லாத ஆனந்த் சுப்ரமணியன் என்ற நிர்வாகியை ஆலோசகராகவும், என்.எஸ்.இ-ன் இயக்க அதிகாரியாகவும் நியமித்தது தொடர்பாக இவர் மீது குற்றம் சாட்டப்பப்பட்டது. கடந்த பிப்ரவரி 17-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று சித்ரா ராமகிருஷ்ணன் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இந்நிலையில், சாமியார் என்றொருவருக்கு உருவம் இல்லையென்று அது ஒரு ‘ஆன்மீக சக்தி’ என்றும் சித்ரா ராமகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.