SBI Debit Card: எஸ்பிஐ சேவை கட்டணம் அதிகரிப்பு; எந்த கார்டுக்கு எவ்வளவு உயர்வு?
SBI Hikes Debit Card: டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணத்தை எஸ்பிஐ வங்கி அதிகரித்தது.
SBI Hikes Debit Card Maintenance Charges: ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
எஸ்.பி.ஐ வங்கி அறிவிப்பு:
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, வியாழன் அன்று( மார்ச் -28 ) டெபிட் கார்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது.
எஸ்பிஐ டெபிட் கார்டுகளான கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம் மற்றும் கான்டாக்ட்லெஸ் உள்ளிட்ட டெபிட் கார்டுகளுக்கான பராமரிப்பு கட்டணங்களை உயர்த்துவதாக எஸ்பிஐ அறிவிப்பு வெளியிட்டது. இந்த விலை உயர்வானது, ஏப்ரல் 1, 2024 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவா, கோல்ட் மற்றும் காம்போ டெபிட் கார்டுகளுடன் கூடிய கிளாசிக், சில்வர், குளோபல், பிளாட்டினம் மற்றும் காண்டாக்ட்லெஸ் உள்ளிட்ட பல்வேறு வகை டெபிட் கார்டுகளுக்கு இந்த திருத்தம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SBI Hikes Annual Debit Card Maintenance Charges By Rs 75 In These Cards From April 1https://t.co/NejdB3FLk5
— ABP LIVE (@abplive) March 28, 2024
கூடுதலாக, டெபிட் கார்டுகளை வழங்குதல் மற்றும் மாற்றுதல் தொடர்பான கட்டணங்களும் மாற்றி அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணங்கள் விவரம்:
- கிளாசிக், சில்வர் மற்றும் காண்டாக்ட்லெஸ் டெபிட் கார்டுகளுக்கு தற்போது உள்ள கட்டணம் ரூ.125 + ஜிஎஸ்டி-லிருந்து ரூ.200 + ஜிஎஸ்டி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
- யுவா, கோல்ட், காம்போ டெபிட் கார்டு மற்றும் மை கார்டு ஆகியவற்றுக்கான கட்டணங்கள் ரூ.175 + ஜிஎஸ்டியிலிருந்து ரூ.250 + ஜிஎஸ்டியாக அதிகரிக்கும் என அதிகரிக்கப்பட்டுள்ளது.
- எஸ்பிஐ பிளாட்டினம் டெபிட் கார்டுக்கான வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ரூ.250 + ஜிஎஸ்டியில் இருந்து ரூ.325 + ஜிஎஸ்டியாக உயரும் என அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரைட் பிரீமியம் வணிக டெபிட் கார்டு, ரூ.350 + ஜிஎஸ்டியிலிருந்து ரூ.425 + ஜிஎஸ்டியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- மேலும், டெபிட் கார்டை மாற்றுவது போன்ற பிற சேவைகளுக்கான கட்டணங்கள் ரூ. 300 + ஜிஎஸ்டி எனவும், டெபிட் கார்டு பின் மாற்றுவதற்கு ரூ. 50 + ஜிஎஸ்டி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாட்டு பரிவர்த்தனை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்க்கவும்.