மேலும் அறிய

illegal PF withdrawal : இ.பி.எப் வைப்பு நிதியில் இருந்து ரூ.37 கோடி கையாடல் - விசாரணை தீவிரம்!

வெளிநாடுகளுக்கு சென்ற பி.எப் சந்தாதாரர்கள் (அல்லது) வேறு பணிக்கு மாறிய பின்பு பி.எப் கணக்கை மாற்றம் செய்யாத சந்ததார்களின் கணக்கில் இருந்து ஒரு பகுதியை பண மோசடி செய்துள்ளனர். 

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மும்பை மண்டல அலுவலகத்தில்  இருந்து முறைகேடாக ரூ. 37 கோடி ரூபாய் கையாடல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

பெரும்பாலும், நீண்ட காலம் பங்களிப்பு இல்லாத கணக்குகளில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பணத்தை கையாடல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்கு சென்ற பி.எப் சந்தாதாரர்கள் (அல்லது) வேறு பணிக்கு மாறிய பின்பு பி.எப் கணக்கை மாற்றம் செய்யாத சந்ததார்களின் கணக்கில் இருந்து ஒரு பகுதியை பண மோசடி செய்துள்ளனர். 

கொரோனா தொற்று சமயத்தில் இபிஎப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ்(PMGKY) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விதிமுறையின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) (அல்லது) இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச்செலுத்த தேவையில்லாத முன்பணமாக (non-refundable COVID-19 advance) இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம். தற்போது, வரை இபிஎப்ஓ 76.31 லட்சம் கோவிட்-19 முன்பண கோரிக்கைகளை ஏற்று, உறுப்பினர்களுக்கு  மொத்தம் ரூ.18,698.15 கோடி விநியோகித்துள்ளதாக இபிஎஃப் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மேலும், கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎப்ஓ) முன்னதாக  அனுமதியளித்தது.

குறைவான தொகைக்கும், உறுப்பினர்களால் விண்ணப்பிக்க முடியும். இந்த கோவிட்-19 முன்பணம், தொற்று காலத்தில் இபிஎப் உறுப்பினர்களுக்கு குறிப்பாக ரூ.15,000-க்கும் கீழ் சம்பளம் பெறுபவர்களுக்கு மிகுந்த உதவியாக இருந்து வந்தது.  

முன்னதாக, இந்த விவகாரம் குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் பேசிய  மத்திய பிஎஃப் கமிஷனர் சுனில் பர்த்வால் ," விரிவான  உள்கட்ட  விசாரணை நடைபெற்று வருகிறது. பொய்யான கணக்குகளில் (Non-Existent Accounts) இருந்து நிலுவைத் தொகை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இபிஎப் சந்தாதாரர்களின் கணக்கில் எந்த மோசடியும் நடைபெற வில்லை, சந்தாதாரர்ககளின்  வைப்பு நிதி பாதுகாப்பாக உள்ளது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.    

illegal PF withdrawal : இ.பி.எப் வைப்பு நிதியில் இருந்து ரூ.37 கோடி கையாடல் - விசாரணை தீவிரம்!

"இருப்பினும், மும்பை மண்டல காண்டிவிலி அலுவலகத்தில் உள்ள சில ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது முதற்கட்ட  விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தார். 

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக நான்கு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.    

ஊழியர் வருங்கால வைப்பு நிதி: 

மாத சம்பளம் வாங்கும் அனைத்து தொழிலாளர்களுக்கு அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்கள் இ.பி.எப். (EPF) எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை (Employee Provident fund) வழங்கி வருகிறது. பொதுவாக இது மாதம் தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது பி.எப். கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. தொழிலாளர்கள் இந்த பணத்தினை தற்பொழுது தேவைப்படும் பொழுது pf advance ஆகவும்,  பணி ஓய்வுக்குப் பின்னர் முழுமையாக எடுக்கவும் பிஎப் அலுவலகம் அனுமதிக்கிறது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பெற விண்ணப்பிப்பதற்கு யு.ஏ.என் (UAN) அல்லது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (Universal Account Number) எனப்படும் பொதுக் கணக்கு எண்ணும் அதனை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்திய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் செயல்பாட்டில் இருக்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண், பான் எண் போன்றவையும் இணைக்கப்பட்டிருக்கிறதா? என்பதனை உறுதி செய்துக்கொள்ளவேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget