கொரோனா பரவல்: பி.எஃப். சேவைகளை ஆன்லைனில் பெற அறிவுறுத்தல்
09345750916 எனும் வாட்ஸ்அப் எண்ணிலும், சென்னை தெற்கு மண்டல அலுவலகம் தொடர்பான விசாரணைகளை 06380366729 எனும் வாட்ஸ்அப் எண்ணிலும் அனுப்பலாம்.
வருங்கால வைப்பு நிதி கோரிக்கை குறித்த விசாரணைகளுக்காக ஆன்லைன் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு ரித்துராஜ் மேதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1, மண்டல அலுவலகம், சென்னை வடக்கு மற்றும் தெற்கு, ரித்துராஜ் மேதி வெளியட்ட செய்திக் குறிப்பில்,
"சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தின் கீழ் வரும் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள், ro.chennai1@epfindia.gov.in எனும் முகவரிக்கும், சென்னை தெற்கு மண்டல அலுவலகத்தின் கீழ் வரும் உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள், ro.chennai2@epfindia.gov.in எனும் முகவரிக்கும் மின்னஞ்சல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறைகளை பதிவு செய்து கொள்வதற்காக அனைத்து வேலை நாட்களிலும் 044-28139200, 201, 202 மற்றும் 28139310 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்படும்.
மேலும், சென்னை வடக்கு மண்டல அலுவலகம் தொடர்பான கேள்விகளை 09345750916 எனும் வாட்ஸ்அப் எண்ணிலும், சென்னை தெற்கு மண்டல அலுவலகம் தொடர்பான விசாரணைகளை 06380366729 எனும் வாட்ஸ்அப் எண்ணிலும் அனுப்பலாம்.
தற்போதைய பெருந்தொற்று சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஆன்லைன் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் " என்று தெரிவிக்கப்பட்டது.