Petrol, Diesel Price: தொடர்ந்து 36வது நாளாக அதே நிலை, ஒரே விலை! இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்
தொடர்ந்து 36 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 2017 நிலவரப்படி, இந்தியாவில் பெட்ரோல் விலை தினமும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது, இது டைனமிக் எரிபொருள் விலை முறை என்று அழைக்கப்படும். பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் காலை 06:00 மணிக்கு மாற்றியமைக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்பு ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் விலை மாற்றியமைக்கப்பட்டது.
அமெரிக்க டாலருக்கு ரூபாய் மாற்று விகிதம், கச்சா எண்ணெய் விலை, உலகளாவிய குறிப்புகள், எரிபொருளுக்கான தேவை மற்றும் பல இதில் அடங்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, இந்தியாவில் விலை உயரும். எரிபொருளின் விலையில் கலால் வரி, மதிப்பு கூட்டு வரி (VAT) மற்றும் டீலர் கமிஷன் ஆகியவை அடங்கும். VAT மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். கலால் வரி, டீலர் கமிஷன் மற்றும் வாட் ஆகியவற்றைச் சேர்த்த பிறகு, பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை கிட்டத்தட்ட இருமடங்காகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை மத்திய அரசு தீபாவளியன்று குறைத்தது. இதையடுத்து, சென்னையில் பெட்ரோல் ரூபாய் 101.40க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்றும் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 36 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், "டீசல் மீதான கலால் வரிக் குறைப்பு பெட்ரோலை விட இருமடங்காக இருக்கும். இந்திய விவசாயிகள், தங்கள் கடின உழைப்பின் மூலம், ஊரடங்கின் போதும் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்காற்றினர். டீசல் மீதான பெரியளவிலான கலால் வரிக் குறைப்பு வரவிருக்கும் ரபி பருவத்தில் விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும்.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்