![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Petrol Diesel Price: அரை சதத்தை கடந்தும் சதம் ப்ளஸ் உடன் மாறாத பெட்ரோல் விலை!
தொடர்ந்து 50வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
![Petrol Diesel Price: அரை சதத்தை கடந்தும் சதம் ப்ளஸ் உடன் மாறாத பெட்ரோல் விலை! petrol diesel price did not change as fiftieth day in Chennai Petrol Diesel Price: அரை சதத்தை கடந்தும் சதம் ப்ளஸ் உடன் மாறாத பெட்ரோல் விலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/24/fe5a7deb9c2756cd5cf4e8418d1d71d8_original.gif?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தொடர்ந்து 50வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையிலும், இந்தியாவின் பெட்ரோல்,டீசல் விலை குறையாமல் இருந்து வருகிறது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் டீசல் விலை எவ்வித மாற்றமுமின்றி விற்கப்படுகிறது. தொடர்ந்து 50வது நாளாக பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 101.40க்கும், டீசல் லிட்டருக்கு ரூபாய் 91.43க்கும் விற்கப்பட்டு வருகிறது.
நவம்பர் மாத தொடக்கத்தில் 80 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெயின் விலை, மாத இறுதியில் 70.86 அமெரிக்க டாலராக குறைந்தது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளின் நிர்பந்தத்தால் 'ஒபெக் ப்ளஸ்' எனப்படும் ரஷ்யா உள்ளிட்ட பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் அமைப்பு உற்பத்தி கட்டுப்பாடுகளை நீக்க முடிவு செய்துள்ளதால், கச்சா எண்ணெய் விலையை சரியத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, கடந்த நவம்பர் 3ம் தேதி தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மத்திய கலால் வரியை முறையே ரூ 5 மற்றும் ரூ 10 குறைக்கும் குறிப்பிடத்தக்க முடிவை மத்திய அரசு எடுத்துது. ஆனால், அதன் பின்பு ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை சரியத் தொடங்கியது. இருந்தாலும், இந்திய எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விலையைக் குறைக்காமல் உள்ளன.
![Petrol Diesel Price: அரை சதத்தை கடந்தும் சதம் ப்ளஸ் உடன் மாறாத பெட்ரோல் விலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/24/991da56cface1effc0e4723c64ea6e6c_original.jpg)
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தருமபுரி எம்.பி செந்தில்குமார், " எண்ணெயை சந்தைபடுத்தும் நிறுவனங்களுக்கு லாபத்தில் இயங்கிகொண்டிருகிறது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகஸ்தர்களின் நிலை மோசமாகி வருகிறது. 40 மாதங்களுக்கு மேலாக அவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விற்பனைக் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. ஆகையால் இவர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அபூர்வா சந்திரா குழுவின் பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும்" என்று தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக கச்சா எண்ணெய் தேவை மீட்சி அங்கு காணப்படுகிறது. இதன், காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கணிசமாக அதிகரிக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)