மேலும் அறிய

Petrol,Diesel Price Today : உச்சத்திலேயே நிற்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம்!

இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் தொடர்கிறது.

நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.  சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.92க்கு விற்கப்பட்டது. டீசல் லிட்டருக்கு ரூபாய் 94.24க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி நேற்றைய விலையில் தொடர்கிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.92க்கும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலே சென்று கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை 29 மடங்கு அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 60க்கும் மேற்பட்ட முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதில் இருந்து, கிட்டத்தட்ட 38 முறை பெட்ரோல்/டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Petrol,Diesel Price Today : உச்சத்திலேயே நிற்கும் பெட்ரோல், டீசல் விலை: இன்றைய நிலவரம்!             

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த விலை நிலவரம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரம், எண்ணெய் நிறுனங்களின் லாபம், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை ரூபாய் 100ஐ கடந்து விற்பனை செய்யப்படுவது அனைவரையும் அவதிக்குள்ளாக்கி வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால் ஏழை, எளிய மக்கள், நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாங்கும் ஊதியமும், உழைக்கும் பணமும் பெட்ரோல் போடுவதற்காகவே செலவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். வடமாநிலங்களில் சதத்தை தொட்ட பெட்ரோல் விலை தமிழ்நாட்டிலும் தொட்டுள்ளது. தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்பு ஏதும் தற்போது வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

முன்னதாக, தமிழ்நாடு அரசு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  வெளியிட்ட செய்திக் குறிப்பில், "2014ம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது. 

2014-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏழு வருடங்களில் பெட்ரோல் டீசல் மீதான மத்திய அரசின் வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு மே மாதத்தில் லிட்டருக்கு ரூ.9.48 ஆக இருந்த பெட்ரோல் மீதான வரி மே 2021 மாதத்தில் லிட்டருக்கு ரூ.32.9 ஆக உயர்த்தப்பட்டுள்ளது அதாவது மத்திய அரசின் வரி 216% அதிகரிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் வரிபங்கீடானது மற்ற மாநிலங்களை விட குறைவாக உள்ளது. இந்த சூழலில் பெட்ரோல் டீசல் மீதான வரியை மேலும் குறைப்பது என்பது அரசாங்கத்திகு பெரும் நிதிச் சுமையை ஏற்படுத்தும்" என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Israel Iran War: 400 ஏவுகணைகள்! நடுராத்திரியில் இஸ்ரேல் மீது குண்டு மழை பொழிந்த ஈரான்!
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
Breaking News LIVE: உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாடு
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
VCK: உச்சகட்ட எதிர்பார்ப்பு! இன்று நடக்கிறது விசிக மது ஒழிப்பு மாநாடு! என்ன பேசுவார் திருமா?
October 2: தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
தேசப்பிதா காந்தியின் பிறந்த தினம்.. வேறு சில நிகழ்வுகளுக்காகவும் மறக்க முடியாத அக்டோபர் 2
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
மக்களே உஷார்! வடகிழக்கு பருவ மழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த வார்னிங்
Rasi Palan Today, Oct 2: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கு
RasiPalan: கும்பம் வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கலாம், மீனத்துக்கு மகிழ்ச்சியான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
நமது உறவு
நமது உறவு "உசேன் போல்ட்" ஐ விட வேகமாக செல்லும்”: ஜமைக்கா பிரதமர் சந்திப்பில் சுவாரஸ்யமாக பேசிய பிரதமர் மோடி
Embed widget