போஸ்ட் ஆபிஸில் ரூ.3300 பென்சன் வேண்டுமா? இதை செய்தால் போதும்!
அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் பென்சன் யாருக்கும் கிடையாது. அதற்கு இந்த திட்டம் சாதகமாக இருக்கும்.
தபால் நிலையத்தில் குறிப்பிட்ட தொகையினைச் செலுத்தி அதற்கேற்றால் போல், மாதந்தோறும் பென்சன் பெறும் மாதந்திர வருமானத்திட்டத்தை (Monthly Income Scheme) தபால் அலுவலகங்கள் செயல்படுத்தி வருகின்றன.
கொரோனா பெருந்தொற்று மக்களை பல இன்னல்களுக்கு ஆளாக்கியேதாடு பலரின் வேலை வாய்ப்பினையும் இழக்கச் செய்தது. அதிலும் ஊரடங்கு காலத்தில் வேலையின்றிம், வருமானம் இன்றியும் மக்கள் இன்னல்களை சந்தித்து வந்த நிலையில் தான் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து உணர ஆரம்பித்தனர். அதிலும் தற்போது அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் பென்சன் என்பது யாருக்கும் கிடையாது. இச்சூழலில் தான் தம்மிடம் உள்ள பணத்தினைச் செலுத்தி மாதத்தோறும் பென்சன் பெறக்கூடிய மாதந்திர வருமானத்திட்டத்தினை தபால் நிலையங்கள் கொண்டுள்ளன.
இந்திய தபால் துறையின் மாதாந்திர வருமானத்திட்டமானது, குறைந்த அளவில் பணத்தினைச் சேமிக்க நினைப்பவர்களுக்காக அமைந்துள்ளது. இத்திட்டத்தினைத் தொடங்க நினைப்பவர்கள் குறைந்த பட்சமாக ரூ.1500ம், அதிகபட்சமாக ரூ.4.5 லட்சமும், கணவன் மற்றும் மனைவி சேர்ந்து கூட்டுக்கணக்கில் மாதந்திர வருமானத்திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்று நினைத்தால் அதிகபட்சம் ரூ.9 லட்சம் வரை செலுத்திக்கொள்ளமுடியும். மேலும் இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் பணத்திற்கு 6.6 சதவீத வட்டியினை தபால் நிலையங்கள் வழங்குகின்றன.
மேலும் மாதந்திர வருமானத்திட்டத்தின் கீழ், ரூ. 50 ஆயிரம் முதலீடு செய்தால் ஆண்டுக்கு ரூ. 3,300 பென்சன் கிடைக்கும். 5 ஆண்டுகளில் ரூ. 16, 500 வரை பெற முடியும். ஆனால் தற்போது நீங்கள் ஒரு லட்சம் செலுத்தும் போது 33 ஆயிரம் வரை இத்திட்டத்தின் கீழ் வருமானம் பெற முடியும். இதோடு ஆண்டுக்கு ரூ. 29,700 பெற வேண்டும் என்றால் ரூ. 4.5 லட்சம் தபால் நிலையங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் 5 ஆண்டுகளில் ரூ. 1,48,500 வரை சம்பாதிக்க முடியும்.
இந்த தபால் அலுவலக மாத வருமான திட்டக்கணக்கினை தனி நபர்கள் காசோலை அல்லது குறிப்பிட்ட பணத்தினை செலுத்தி தொடங்கி கொள்ளலாம். மேலும் இந்த கணக்கினை துவங்கி 5 ஆண்டுகளுக்கு பிறகு வட்டியுடன் பணத்தினைப் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் மாதந்திர திட்டக்கணக்கினை திறந்த ஒரு வருடத்தில் பணத்தினை காசோலையாக மாற்ற முடியும். மூன்று வருடத்திற்கு முன்னதாக கணக்கினை முடித்து முதலீடு செய்த பணத்தினை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதில் 2 சதவீத வட்டி பிடித்து வைத்துக்கொள்ளப்படும் என இந்திய தபால் துறை தெரிவிக்கிறது.
.குறிப்பாக வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றம் செய்யமுடியும். முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளை திறக்க முடியும் என்று இந்திய போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. மேலும் மாத வருமானத்திட்டக்கணக்கினை திறக்கும் நேரத்தில் யார் நாமினி என குறிப்பிடுவதையும் முறையாக மாற்றவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் சுமார் 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் நிலையங்களை இந்தியா போஸ்ட் கொண்டுள்ள நிலையில், தபால் சேவை மட்டுமில்லாது மக்களுக்கு பயன்பெறும் வகையில் ஆர்.டி, எப்.டி, செல்வ மகள் போன்ற பல்வேறு நிதி சேவைகளையும் வழங்கி வருகிறது.