போஸ்ட் ஆபிஸில் அதிக வட்டியுடன் மெச்சூரிட்டி தொகையைப் பெற வேண்டுமா?
தபால் அலுவலகத்தில் இத்திட்டம் பெண்குழந்தைகளுக்கு செல்வ மகள் என்றும், ஆண் குழந்தைகளுக்கு பிபிஎஃப் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது.
தபால் அலுவலக சேமிப்புத்திட்டத்தில் நீங்கள் மாதம் ரூபாய் 1000 செலுத்தினால் நிச்சயமாக ரூபாய் 3 லட்சத்திற்கு அதிகமாக ரிட்டன்ஸ் தொகையைப் பெறக்கூடிய நல்ல திட்டம் தான் பிபிஎஃப்.
இன்றைய சூழலில் சேமிப்புப்பழக்கம் என்பது அனைவரின் அத்தியாவசியப் பணிகளில் ஒன்றாகிவிட்டது. அவசரத்தேவை அல்லது எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு வங்கி அல்லது அஞ்சல் அலுவலகங்களின் மூலமாக மக்கள் தங்களது பணத்தை முதலீடு செய்துவருகின்றனர். குறிப்பாக அஞ்சல் அலுவலகத்தில் மாதாந்திர வருமான திட்டம், தங்க மகள் சேமிப்பு திட்டம் , ஆர்.டி , எப்டி போன்ற பல்வேறு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அனைத்து தரப்பட்ட வாடிக்கையாளர்களையும் மனதில் கொண்டு பிபிஎஃப் என்ற திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இது நீண்ட கால சேமிப்பு திட்டமாக உள்ள நிலையில் நிச்சயம் அனைத்துத் தரப்பட்ட மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கம்.
பொதுவாக 15 ஆண்டுகள் வரை பிபிஎஃப் கணக்கில் மக்கள் பணத்தைச்செலுத்த வேண்டும். இதில் நீங்கள் மாதம் ரூபாய் 1000 முதலீடு செய்யும் போது பல லட்ச ரூபாய் வரை மெசூரிட்டி தொகையை நீங்கள் பெறமுடியும். இத்திட்டத்தை அனைத்து வயதினரும் பெற முடியும். குறிப்பாக தபால் அலுவலகத்தில் இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் என்றும், ஆண் குழந்தைகளுக்கு பிபிஎஃப் என்ற பெயரில் நடைமுறையில் உள்ளது.
பிபிஎஃப் எவ்வளவு தொகை செலுத்த வேண்டும்?
தபால் அலுவலகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள இந்த பிபிஎஃப் சேமிப்பு திட்டம் என்பது, நம்முடைய வீட்டில் இருக்கும் உண்டியல் என்று தான் கூற வேண்டும். நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ? அதை எப்போது வேண்டுமானாலும் செலுத்திக்கொள்ளலாம். குறிப்பாக ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூபாய் 1.5 லட்சம் வரை இதில் நீங்கள் முதலீடு செய்துக்கொள்ளலாம். ஆனால் ஆண்டுக்கு 12 முறை கட்டாயம் இதில் நீங்கள் டிரான்ஸ்சாக்சன் செய்திருக்க வேண்டும். 15 ஆண்கள் கழித்து நீங்கள் நீங்கள் முதலீடு செய்த பணம் வட்டியுடன் கிடைக்கும். இதற்கு சாரசரியாக 7 முதல் 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும். இது வங்கிகளில் வழங்கக்கூடிய வட்டியை விட அதிகமாக உள்ளது. ஒரு வேளை நீங்கள் 15 ஆண்டுகள் கழித்து மேலும் 5 ஆண்டுகளுக்கு இந்த சேமிப்புத் திட்டத்தை நீடித்துக்கொள்ளமுடியும்.
இந்த திட்டத்தில் நீங்கள் மாதம் ரூபாய் ஆயிரம் முதலீடு செலுத்துகிறீர்கள் என்றால் 15 ஆண்டுகளில் உங்களது சேமிப்பில் 1.80 லட்ச ரூபாய் இருக்கும். அந்நேரத்தில் இதற்குரிய வட்டியானது ரூபாய் 1.45 லட்சமாக இருக்கும். எனவே அப்போது உங்களது மெச்சூரிட்டி தொகையாக ரூபாய் 3.25 லட்சத்தைப்பெற முடியும். இதே இந்த பிபிஎஃப் திட்டத்தை 30 ஆண்டுகளுக்கு நீடிக்கும் போது ரூாய் 12 லட்சம் பெற வரை மெச்சூரிட்டி தொகையை நம்மால் பெற முடியும். இந்த திட்டத்தை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் செலுத்தி வரும் போது, 6 வது ஆண்டிலிருந்து இதன் மூலம் கடன் பெற முடியும்.
அஞ்சல் அலுவலகத்தில் பிபிஎஃப் தொடங்குவதற்குத் தேவையான ஆவணங்கள்..
குழந்தைகளுக்கு தொடங்க வேண்டும் என்றால், குழந்தைளின் பிறப்பு சான்றிதழ், ஆதாரர் இருந்தால் ஆதார் அடையாள அட்டை, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டா போன்றவை தேவை. அதேப்போல் பெரியவர்களுக்கும் இதுப்போன்ற அனைத்து ஆவணங்களும் கட்டாயம் தேவை.
இந்த ஆவணங்களுடன் அஞ்சல் அலுவலகத்தில் கொடுக்கப்படும் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து அஞ்சல் அலுலக ஊழியர்களிடம் கொடுத்து இந்த சேமிப்புத் திட்டத்தை சுலபமாகத் தொடங்கலாம்.