NPS Vatsalya Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா - ரூ.10,000 போதும், ரூ.2.75 கோடிக்கு அதிபதி, எப்படி சாத்தியம்?
NPS Vatsalya Scheme Calculator: மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
NPS Vatsalya Scheme Calculator: குழந்தைகளுக்கான என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில், ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் முதலீடு செய்து கோடிகளை ஈட்டுவது எப்படி என்ற விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
என்பிஎஸ் வாத்சல்யா திட்டம்:
NPS வத்சல்யா என்பது குழந்தைகளின் நிதி எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட, தேசிய ஓய்வூதிய அமைப்பில் உள்ள ஒரு புதிய திட்டமாகும். அண்மையில் நடைமுறைக்கு வந்த NPS வாத்சல்ய யோஜனா திட்டம், ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் நிர்வகிக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம், பெற்றோர்கள்/பாதுகாவலர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு, குழந்தைப் பருவத்தில் இருந்து 18 வயது வரை ஓய்வூதியக் காப்பீட்டை உருவாக்கலாம். மைனர் பெயரில் கணக்கு திறக்கப்பட்டு கார்டியனால் இயக்கப்படுகிறது. குற்ப்பிட்ட மைனர் மட்டுமே இந்த திட்டத்டின் பயனாளியாக கருதப்படுவர்.
NPS வாத்சல்யா தகுதி: அனைத்து சிறார்களும் (18 வயது வரை உள்ள தனிநபர்கள்) NPS வாத்சல்யா திட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர்கள்.
NPS வாத்சல்யா பங்களிப்பு: வாத்சல்யா கணக்கைத் திறக்க, குறைந்தபட்ச தொடக்க பங்களிப்பு ரூ. 1,000 செலுத்த வேண்டும். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ரூ.1,000 செலுத்த வேண்டும்.
என்பிஎஸ் வாத்சல்யா கணக்கை எப்படி திறப்பது?
வங்கிகள், தபால் அலுவலகங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிகள் போன்ற பதிவு செய்யப்பட்ட இடங்களில் ஆன்லைன் அல்லது நேரில் பெற்றோர் கணக்கைத் திறக்கலாம். இந்த செயல்முறையை NPS அறக்கட்டளையின் eNPS தளம் மூலமாகவும் கணக்கை திறக்க முடியும் . ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி உட்பட பல வங்கிகள் என்பிஎஸ் வாத்சல்யா முயற்சியை எளிதாக்க PFRDA உடன் கூட்டு சேர்ந்துள்ளன.
18 வயதிற்குப் பிறகு கணக்கு மாற்றம்:
அறிவிப்பின்படி, குழந்தைக்கு 18 வயது ஆனதும், கணக்கு தானாகவே வழக்கமான தேசிய ஓய்வூதிய திட்ட (NPS) கணக்காக மாற்றப்படும். இந்த மாற்றம் NPS அடுக்கு (அனைத்து குடிமக்கள்) திட்டத்திற்கு தடையற்ற மாற்றத்தை அனுமதிக்கிறது. ஆட்டோ சாய்ஸ் மற்றும் ஆக்டிவ் சாய்ஸ் உட்பட அனைத்து முதலீட்டு அம்சங்களையும் செயல்படுத்துகிறது. ஆரம்பகால முதலீடு மற்றும் கட்டமைக்கப்பட்ட சேமிப்புகளை ஊக்குவிப்பதன் மூலம், NPS வாத்சல்யா இளைஞர்களுக்கான உறுதியான நிதி அடித்தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
📊 Your Pension Potential with #NPSVATSALYA
— PIB in Chandigarh (@PIBChandigarh) September 18, 2024
• Annual Contribution: ₹10,000
• Investment Duration: 18 years
• Expected Corpus at 18: ₹5 lakh @10% RoR
Expected Corpus at 60:@10% RoR: ₹2.75 Cr@11.59%* RoR: ₹5.97 Cr@12.86%# RoR: ₹11.05 Cr
Start your investment today! pic.twitter.com/S7pt00MuT2
NPS வாத்சல்யா கால்குலேட்டர்:
பெற்றோர்கள் 18 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வருடாந்திர பங்களிப்பு செய்தால் . இந்த காலகட்டத்தின் முடிவில், எதிர்பார்க்கப்படும் 10% வருவாய் (RoR) விகிதத்தில், முதலீடு தோராயமாக ரூ.5 லட்சமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் 60 வயதை அடையும் வரை முதலீடு தொடர்ந்தால், எதிர்பார்க்கப்படும் கார்பஸ் வெவ்வேறு வருவாய் விகிதங்களின் அடிப்படையில் கணிசமாக மாறுபடும். 10 % வருவாய் விகிதத்தில் உங்களது நிதி வளர்ச்சி சுமார் ரூ.2.75 கோடியை எட்டும் .
ஈக்விட்டியில் 50%, கார்ப்பரேட் கடனில் 30% மற்றும் அரசாங்கப் பத்திரங்களில் 20% என்ற பொதுவான NPS ஒதுக்கீட்டின் அடிப்படையில் சராசரியாக 11.59% ஆகவருமானம் மேம்பட்டால், எதிர்பார்க்கப்படும் தொகை ரூ.5.97 கோடியாக உயரக்கூடும் . அதேநேரம், 12.86% அதிக சராசரி வருமானத்துடன் (ஈக்விட்டியில் 75% மற்றும் அரசுப் பத்திரங்களில் 25% போர்ட்ஃபோலியோ ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்டது), நிதி வளர்ச்சி ரூ.11.05 கோடியை எட்டலாம். இந்த புள்ளிவிவரங்கள் தரவுகளின் அடிப்படையில் விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். உண்மையான வருமானம் மாறுபடலாம்.