மேலும் அறிய

EPFO Account Withdrawal: உங்கள் பி.எஃப் தொகையில் இருந்து பணம் எடுக்கவேண்டுமா? இந்த டிப்ஸ்ஃபாலோ பண்ணுங்க..!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் உங்கள் வங்கி எண்கள் கணக்குடன் இணைத்துக் கொள்வது முக்கியமானதாகும்

கொரோனா இரண்டாவது அலையை முன்னிட்டு, இபிஎப் சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து 2-வது முறையாக முன்பணம் எடுத்துக்கொள்ள தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கழகம் (இபிஎப்ஓ) முன்னதாக  அனுமதியளித்தது.

முன்னதாக, தொற்று சமயத்தில் இபிஎப் சந்தாதாரர்கள் சிறப்பு முன்பணம் எடுத்துக்கொள்ளும் வசதி பிரதமரின் ஏழைகள் நலன் திட்டத்தின் கீழ்(PMGKY) கடந்த 2020 மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விதிமுறையின் கீழ், 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப்படி (டி.ஏ) அல்லது இபிஎப் கணக்கில் உள்ள நிலுவைத் தொகையில் 75 சதவீதம் இதில் எது குறைவோ, அதை திருப்பிச்செலுத்த தேவையில்லாத முன்பணமாக (non-refundable COVID-19 advance) இபிஎப் சந்தாதாரர்கள் எடுத்துக்கொள்ளலாம். தற்போது, வரை இபிஎப்ஓ 76.31 லட்சம் கோவிட்-19 முன்பண கோரிக்கைகளை ஏற்று, உறுப்பினர்களுக்கு  மொத்தம் ரூ.18,698.15 கோடி விநியோகித்துள்ளதாக இபிஎஃப் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

EPFO Account Withdrawal: உங்கள் பி.எஃப் தொகையில் இருந்து பணம் எடுக்கவேண்டுமா? இந்த டிப்ஸ்ஃபாலோ பண்ணுங்க..!

எனவே, இபிஎப் கணக்கில் இருந்து  முன்பணம் எடுத்துக்கொள்ள விரும்பினால், கீழ்க்கண்ட ஐந்து நடைமுறைகளை  மேற்கொள்ள வேண்டும்.      

1. உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) விவரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்: இபிஎஃப் சந்தாதாரர்கள் உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) விவரங்களை கட்டாயமாக புதுப்பித்துக் கொள்ள வேண்டும். கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரிக்கணக்கு அட்டை, UIDAI வழங்கும் ஆதார் அட்டை மற்றும் NREGA வழங்கும் பணி அட்டை இவற்றுள் ஏதாவது ஒன்றை அடையாளச் சான்றாக அளிக்கலாம் . மேலும், விவரங்களுக்கு e-KYC Portal என்ற வலைதளத்தில் சென்று பார்க்கவும்.  

2. வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (UAN) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்:  யூமாங் (UMANG Mobile App)செல்போன் செயலியில் வைப்பு நிதி வாரிய இணைப்பைப் பயன்படுத்தி, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை சந்தாதாரர்கள் இணைத்துக் கொள்ளலாம். (அல்லது) www.epfindia.gov.in >> Online Services >> e-KYC Portal>> LINK UAN AADHAAR. வலைத்தளத்தின் மூலமாகவும் இணைத்துக் கொள்ளலாம்.

மின்னணு முறையிலான உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள் திட்டத்தின் இணையப் பக்கத்தில் (https://iwu.epfindia.gov.in/eKYC/), சந்தாதாரரின் பயோமெட்ரிக் விவரங்களைப் பயன்படுத்தி, நிரந்தரக் கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இந்தப் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

3. வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் (UAN) வங்கி கணக்கு எண்கள் இணைக்க வேண்டும் : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிரந்தரக் கணக்கு எண்ணுடன் உங்கள் வங்கி எண்கள் கணக்குடன் இணைத்துக் கொள்வது முக்கியமானதாகும். https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ >> கடவுச் சொல் கொடுத்து உள்நுழைய வேண்டும் >> Manage >>KYC >>Bank Account Number  Name and IFSC code 

4. பெயர், முகவரி அல்லது வங்கி கணக்கு மாற்றப்பட்டுவிட்டால் உடனடியாக வைப்பு நிதி இணையப் பக்கத்தில் புதிப்பிக்கப்பட வேண்டும்

5. பிறந்த தேதி ஆவணங்களில் உள்ளது போல் சரியான முறையில்  இருக்கவேண்டும்.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget