இந்திய பருத்தி, சர்க்கரைக்கு இறக்குமதி ஒப்புதல் அளிக்க பாகிஸ்தான் மறுப்பு

இந்தியாவில் இருந்து பருத்தி, சர்க்கரை இறக்குமதிக்கு ஒப்புதல் அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த முடிவுக்கு அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளார்

FOLLOW US: 

இந்திய பருத்தி, சர்க்கரைக்கு இறக்குமதி ஒப்புதல் அளிக்க பாகிஸ்தான் மறுப்புபுதுடில்லியில் இருந்து பருத்தி மற்றும் சர்க்கரையை இறக்குமதி தொடர்பாக பாகிஸ்தான் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு அளித்த பரிந்துரையை (ஈ.சி.சி) மத்திய அமைச்சரவை நிராகரித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்தன. 

முன்னதாக  கடந்த புதன்கிழமை, இந்தியாவுடனான இறக்குமதி தடையை நீக்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது.   நிதி அமைச்சர் ஹம்மத் அசார் தலைமையிலான பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு  கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த முடிவை தற்போது பாகிஸ்தான் மத்திய அமைச்சரவை நிராகரித்து விட்டது.  

2019 ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக இந்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து இரு - நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பொருளாதார ஒருங்கிணைப்புக் குழுவின் பரிந்துரை மீண்டும் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவை புதுப்பிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவின் இணக்கமான நாடு பாகிஸ்தான் (எம்எஃப்என்) என்ற அந்தஸ்தை இந்தியா வாபஸ் பெற்றது. இதன் காரணமாக, பாகிஸ்தான் நாட்டில் இருந்து வரும் இறக்குமதிகள் மீதான சுங்க வரியை 200% ஆகவும்  இந்தியா  உயர்த்தியது.

முன்னதாக,  கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல் / கையகப்படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசு திருத்தம் செய்தது. அதன்படி, இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் உள்ள ஒருவர் அல்லது இந்தியாவில் முதலீடு செய்வதால் பலன் அடையும் உரிமையாளர் அத்தகைய ஏதாவது ஒரு நாட்டின் குடிமகனாக இருந்தால் அல்லது அங்கிருந்தால், அந்த நாட்டின் அரசு மூலமாகத்தான் முதலீடு செய்ய முடியும்.இந்திய பருத்தி, சர்க்கரைக்கு இறக்குமதி ஒப்புதல் அளிக்க பாகிஸ்தான் மறுப்பு

மேலும் பாகிஸ்தான் குடிமகன் அல்லது  பாகிஸ்தானில் செயல்படும் வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அரசு மூலமாக மட்டுமே முதலீடு செய்யமுடியும்.  அதிலும் பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி நீங்கலாக மற்ற பிரிவுகள் / செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம்.  அயல்நாட்டு முதலீட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ள பிரிவுகள் / செயல்பாடுகளில் முதலீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.  

இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொவிட்-19 தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, " இம்ரான் கான் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் .

Tags: india pakistan cotton sugar imran khan import

தொடர்புடைய செய்திகள்

Gold, Silver Price : சென்னையில் தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன?

Gold, Silver Price : சென்னையில் தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன?

Petrol Diesel Price | மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம்!

Petrol Diesel Price | மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை.. இன்றைய நிலவரம்!

ஆர்டர் செய்ததோ ரிமோட் கார்.. பெற்றதோ பிஸ்கெட் பாக்கெட்: மன்னிப்புக்கேட்ட அமேசான்!

ஆர்டர் செய்ததோ ரிமோட் கார்.. பெற்றதோ பிஸ்கெட் பாக்கெட்:  மன்னிப்புக்கேட்ட அமேசான்!

Tax | ''இரண்டு மடங்கு வரி கட்ட நேரிடும்'' - வருமான வரியின் புதிய விதியை தெரிந்துகொள்ளுங்கள்!

Tax | ''இரண்டு மடங்கு வரி கட்ட நேரிடும்'' - வருமான வரியின் புதிய விதியை தெரிந்துகொள்ளுங்கள்!

Product Banned: வெளிநாட்டில் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. ஜெல்லி முதல் கார் வரை - இதோ லிஸ்ட்!

Product Banned: வெளிநாட்டில் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. ஜெல்லி முதல் கார் வரை - இதோ லிஸ்ட்!

டாப் நியூஸ்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு: பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

PM Modi in J&K Meeting: பிரதமர் உடனான சந்திப்பு நிறைவு:  பல கோரிக்கைகளை முன்வைத்த ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

Youtuber Sattai Duraimurugan: சாட்டை துரைமுருகனின் ஆட்டையை கலைத்தவர் திமுகவில் இணைந்தார்!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

RajaKalakkalRani Comedy Show: விஜய் டிவியின் புதிய நிகழ்ச்சி ‘comedy ராஜா கலக்கல் ராணி’ ..!

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட் சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?

JioPhone Next Features: ஜியோ ஃபோன் நெக்ஸ்ட்  சிறப்பு அம்சங்கள் தெரியுமா? விலை இவ்வளவு தானா?