மேலும் அறிய

Paytm Fastag: ஃபாஸ்டேக் பயனாளர்களுக்கு அதிர்ச்சி! வந்தது முக்கிய அறிவிப்பு - இதை மட்டும் மிஸ் பண்ணாதீங்க!

பேடிஎம்மை தவிர்த்து மற்ற வங்கிகளில் ஃபாஸ்டேக்கை வாங்க வேண்டும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

பேடிஎம்  நிறுவனம்:

இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  பேடிஎம் வங்கி விதிமுறைகளி மீறி பணப் பரிமாற்றம் செய்தது என பல  குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை பேடிஎம் பேபெண்ட்ஸ் வங்கியிடம் விசாரணையை நடத்தி வருகிறது. அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை அடுத்து, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக, பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என்பதால் வாடிக்கையாளர்கள் வேறு தளங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் பயனாளர்களுக்கு அதிர்ச்சி:

மார்ச் 15ஆம் தேதி வரை பேடிஎம் வங்கி சேவையை பயன்படுத்த முடியும். இந்த நிலையில்,  இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, பேடிஎம் வங்கியை தவிர்த்து, மற்ற வங்கிகள் மூலம் ஃபாஸ்டேக் வாங்க வேண்டும்.

மற்ற வங்கிகளில் மார்ச் 15ஆம் தேதிக்குள் ஃபாஸ்டேக்கை வாங்க வேண்டும். பேடிஎம் ஃபாஸ்டேக் பயனர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் வாங்கவில்லை என்றால் அபராதம்  விதிக்க வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்துள்ளது.  ஏற்கனவே இருந்த ஃபாஸ்டேக்கை க்ளோஸ் செய்துவிட்டு, பண்தை திரும்பப்பெற வங்கியிடம் கேட்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 

அதே நேரத்தில் அங்கீகரிப்பட்ட 32 வங்கிகளின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம். அதன்படி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. 

வேறு என்னென்ன கட்டுப்பாடுகள்:

வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது. ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

Election Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள் - ரூ.1 லட்சம் நிதியுதவி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget