Election Congress: பெண்களுக்கான காங்கிரசின் 5 அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள் - ரூ.1 லட்சம் நிதியுதவி
Electon Congress: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெண்களை கவரும் விதமாக, காங்கிரஸ் கட்சி 5 வாக்குறுதிகளை அளித்துள்ளது.
Electon Congress: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பெண்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரசின் 5 தேர்தல் வாக்குறுதிகள்:
காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுனா கார்கே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
- மகாலட்சுமி உத்தரவாதம் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் தலா ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும்.
- இரண்டாவதாக மகளிருக்கு 50 சதவிகித உரிமை என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டத்தில் புதிய ஆட்சேர்ப்புகளில் பாதிக்கு மேல் பெண்களுக்கு உரிமை இருக்கும்.
- மூன்றாவதாக, உழைப்புக்கேற்ற ஊதியம் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி, ஆஷா மற்றும் மதிய உணவுப் பணியாளர்களின் மாத வருமானத்தில் மத்திய அரசின் பங்களிப்பு இரட்டிப்பாக்கப்படும்.
- நான்காவதாக, பெண்களுக்கான அதிகாரம் திட்டத்தின் கீழ் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு துணை ஆலோசகர் நியமிக்கப்படுவார்.
- ஐந்தாவது, சாவித்ரிபாய் பூலே விடுதி திட்டத்தின் கீழ், மத்திய அரசில் பணிபுரியும் பெண்களுக்காக மாவட்ட தலைமையகத்தில் குறைந்தபட்சம் ஒரு விடுதியாவது கட்டப்படும். இந்த விடுதிகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் இரட்டிப்பாக்கப்படும்” என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
#WATCH | Delhi | Congress national president Mallikarjun Kharge says, "Congress is announcing 'Nari Nyay Guarantee' today. Under this, the party is going to set a new agenda for women in the country. Under 'Nari Nyay Guarantee', Congress is making 5 announcements. First,… pic.twitter.com/vXFHqJINue
— ANI (@ANI) March 13, 2024
காங்கிரசின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை:
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான, தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் விதமாக அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகின்றன. அதில் மாநில கட்சிகள் மாநிலங்களுக்கான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க, தேசிய கட்சிகள் நாடு தழுவிய பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அந்த வகையில் காங்கிரசின் தேர்தல் அறிக்கை இறுதி வடிவம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இதில் வாக்காளர்களைக் கவரும் வகையில் மிகப்பெரிய வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை கருத்தில் கொண்டு இந்த தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், மகளிருக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான, 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஏற்கனவே, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அக்னி பாத் திட்டம் ரத்து செய்யப்படும், நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.