மேலும் அறிய

New PF Rules : பிஎஃப் பணத்தை எடுக்க விதிமுறை மாற்றம்...ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்...வெளியான முக்கிய அறிவிப்பு...

பிஎஃப் (PF) பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்படும் வரி குறித்து சில விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

New PF Rules : பிஎஃப் (PF) பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்படும் வரி குறித்து சில விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

மாத சம்பளம் வாங்கும் அனைத்துப்பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி எனப்படும் பிஎஃப் கணக்கு கண்டிப்பாக இருக்கும். ஊழியர்களின் பங்களிப்பு எவ்வளவு அதனை ஒவ்வொரு நிறுவனங்களும் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்துவருகிறது.பென்சன் பெற முடியாதவர்களுக்கு எதிர்க்கால அச்சமின்றி வாழ்வதற்கு மிகப்பெரிய உதவியாக அமைந்தது. மேலும் ஒவ்வொரு பணியாளர்களும் தங்களின் பிஎஃப் கணக்கிலிருந்து அவசரத் தேவைக்குப் பணம் எடுத்துக்கொள்ளும் வசதியும் தற்போது நடைமுறையில் உள்ளது. 

இந்நிலையில் பிஎஃப் பணத்தை எடுப்பதற்கு விதிக்கப்படும் வரி குறித்து சில விதிமுறைகளை மத்திய அரசு திருத்தியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24ஆம் ஆண்டுக்கான நதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் வருங்கால வைப்பு நிதி(EPF) கணக்குடன் பான் கார்டு இணைக்காதவர்கள், பிஎஃப் பணத்தை எடுக்கும்போது விதிக்கப்படும் டிடிஎஸ் வரி 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதிய விதிமுறை என்ன?

பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கு பான் கார்டு அவசியம். பிஎஃப் கணக்குடன் பான் கார்டு இணைத்திற்கு வேண்டும். பணம் எடுப்பதற்கு பான் கார்டு இணைத்தவர்கள், இணைக்காதவர்கள் என இரு தரப்பினருக்கும் இருவேறு விதிமுறைகள் இருக்கின்றன. 

பிஎஃப் கணக்குடன் பான் கார்டு இணைக்கப்பட்டிருந்தால், அவர்கள் பிஎஃப் பணத்தை எடுக்கும்போது அதற்கு டிடிஎஸ் (TDS) வரி விதிக்கப்படாது. அதே போன்று, பிஎஃப் கணக்குடன் பான் கார்டு இணைக்காதவர்கள், பிஎஃப் பணத்தை எடுக்கும்போது அதற்கு விதிக்கப்படும் டிடிஎஸ் (TDS) வரி 30 சதவீதம் இருந்தது.

New PF Rules : பிஎஃப் பணத்தை எடுக்க விதிமுறை மாற்றம்...ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமல்...வெளியான முக்கிய அறிவிப்பு...

ஆனால் தற்போது பான் கார்டு இணைக்காதவர்கள் பிஎஃப் பணத்தை எடுக்கும்போது விதிக்கப்படும் டிடிஎஸ் (TDS) வரி 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எப் கணக்கினை ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
 
1. முதலில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் epfindia.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று யு.ஏ.என்(UAN) மற்றும் பாஸ்வேட் (password) மூலம் நம்முடைய பிஎப் கணக்கிற்குள் உள்நுழைய வேண்டும்.
 
2. பின், 'Online Services' என்பதில் உள்ள 'Claim' என்பதைக் கிளிக் செய்யவும்.
 
3. இப்போது தோன்றும் பக்கத்தில் வங்கிக் கணக்கு எண்ணினை டைப் செய்து 'Proceed For Online Claim' என்பதை கிளிக் செய்யவும்.
 
4. புதிதாகத் திறக்கும் தனி பக்கத்தில் பணத்தை எடுப்பதற்கான காரணம், எவ்வளவு பணம் தேவை என்பன உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்ட வேண்டும். இதில் முழு பணத்தையும் எடுக்க வேண்டுமா? பாதி தொகையை எடுக்க வேண்டுமா? பென்ஷனை மட்டும் எடுக்க வேண்டுமா எனக் தேர்வு செய்ய வேண்டும். (only Pf withdrawl- Form19), (only pesion withdrawl-Form 10c),( Pf advance Form 31 ) என்பதனை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
 
6. இதனையடுத்து வரும் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள முகவரி, பாஸ்புக் முதல்பக்கம் அல்லது செக் புக் போன்றவற்றை இணைத்துக்கொள்ள வேண்டும்.
 
5. அடுத்து, 'Get Aadhaar OTP' என்பதை கிளிக் செய்தால் ஆதாரில் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ரகசிய குறியீட்டு எண் (One Time Password) எஸ்.எம்.எஸ். மூலம் கிடைக்கும். அதனை உரிய இடத்தில் டைப் செய்து ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பித்த பின் அதன் நிலையை 'Online Services' என்பதில் உள்ள 'Claim status' என்பதைக் கிளிக் செய்து நாம் சரியாக தான் apply செய்துள்ளோமே? என்பதை  அறிந்துகொள்ளலாம்.
 
இறுதியாக நாம் விண்ணப்பித்த  விண்ணப்பம் தொழிலாளர் பணிபுரிந்த நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அந்நிறுவனத்திடம் ஒப்புதல் கிடைத்த பின்பு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உள்ள பணம் வங்கிக் கணக்கில் 10 நாட்களுக்குள் டெபாசிட் செய்து வைக்கப்படும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | CollectorNainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அதிகாரத் திமிர்! தமிழ்நாட்டுல இருந்து ஒரு ரூபாய் கூட தரமாட்டோம்" கொதித்தெழுந்த சீமான்
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
மயிலாடுதுறை இரட்டைக்கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது..!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
Anbumani: மும்மொழிக் கொள்கை; 80 ஆண்டுப் போரில் வெல்வது தமிழ்நாடுதான்- அன்புமணி ஆவேசம்!
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
திருமாவளவன் காலில் விழுந்தால் என்ன தப்பு? ஜாதி முத்திரையை குத்தாதீங்க? கூல் சுரேஷ் ஆவேசம்
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
குறைவான பேலன்ஸ் வைத்திருந்தால் கூடுதல் அபராதம்.. புதிய FASTag விதிகள் நாளை முதல் அமல்!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
பரீட்சைக்கு லேட் ஆச்சி; மகாராஷ்டிராவை வாட்டும் ட்ராஃபிக்! மாணவர் எடுத்த அதிரடி முடிவு! நீங்களே பாருங்க!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
GG vs UPW, WPL 2025: முதல் வெற்றியை பெற போவது யார்? குஜராத் vs யு.பி பலப்பரீட்சை.. மைதானம் எப்படி? முழு விவரம்!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
பாஜகவோ, திமுகவோ.. ஃபாசிச அணுகுமுறையை யாராக இருந்தாலும் எதிர்ப்போம்: விஜய் சூளுரை!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.