மேலும் அறிய

National Savings Certificate Scheme: வட்டியாக மட்டுமே ரூ.6.73 லட்சம் சம்பாதிக்கலாம் - தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்ட விவரங்கள்

National Savings Certificate: நிலையான வருமானத்தை வழங்கும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

National Savings Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு, 7.7 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்:

தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது மத்திய அரசின் ஆதரவு பெற்ற சிறு சேமிப்புத் திட்டமாகும். இது  பயனாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதோடு,  அவர்களை பணத்தை சீராக வளர்க்கவும், ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வருமான வரிச் சலுகைகளை பெறவும் உதவுகிறது. அஞ்சல் அலுவலகங்களில் உள்ள உத்தரவாதமான  சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான,  தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கு, 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஐந்து வருட முதிர்வு காலத்தில் பணம் பயனாளருக்கு வழங்கப்படும்.

வருமான விவரம்:

தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட்டு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்துடன் வைப்பாளருக்கான தொகை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்பித் தரப்படும். இந்த உத்தரவாதத்தில் ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் உங்கள் முதலீடு ரூ.1,100, ரூ.11,000, ரூ.21,000 மற்றும் ரூ.51,000 வரை உயரலாம். உதாரணமாக இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யப்பட்டால், 5 ஆண்டுகள் முடிவில் நீங்கள் 21 லட்சத்து 73 ஆயிரத்து 551 ரூபாயை முதிர்ச்சித் தொகையாக பெறலாம். இதில் வட்டி மட்டுமே 6 லட்சத்து 73 ஆயிரத்து 551 ரூபாய் ஆகும். கூடுதல் உதாரணங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.

காலம் ரூ.1,100 முதலீடு செய்தால் ரூ.11,000 முதலீடு செய்தால் ரூ.21,000 முதலீடு செய்தால் ரூ.51,000 முதலீடு செய்தால்
முதலாமாண்டு முடிவில் ரூ.1,185 ரூ.11,847 ரூ.22,617 ரூ.54,927
இரண்டாமாண்டு முடிவில் ரூ.1,276 ரூ.12,759 ரூ.24,358.5 ரூ.59,156
மூன்றாமாண்டு முடிவில் ரூ.1,374 ரூ.13,742 ரூ.26,234 ரூ.63,711
நான்காமாண்டு முடிவில் ரூ.1,480 ரூ.14,800 ரூ.28,254 ரூ.68,617
ஐந்தாமாண்டு முடிவில் ரூ.1,594 ரூ.15,939 ரூ.30,430 ரூ.73,901

முதலீட்டாளருக்கான வரம்பு:

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்ய எந்த உச்ச வரம்பும் இல்லை என்றாலும், குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட மைனர் சார்பாக அவரது கார்டியன் அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ (மூன்று பெரியவர்கள் வரை) முதலீடு செய்யலாம்.

முன்பே முதலீட்டை திரும்பப் பெறமுடியுமா?

தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சில நிபந்தனைகளின் கீழ் ஒருவர், திட்டம் முடிவதற்கு முன்பே (5 வருடங்களுக்கு முன்பே) நிதியை திரும்பப் பெறலாம். இந்த நிபந்தனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

  • தனிநபராக கணக்கை வைத்திருப்பவர் இறந்தால் 
  • கூட்டு முறையில் கணக்கு வைத்திருப்பவர்களில் எவரேனும் இறந்தால்
  • அரசிதழ் அதிகாரியாக இருப்பதன் மூலம் உறுதிமொழி எடுக்கப்பட்டால் 
  • நீதிமன்ற உத்தரவு வழக்கில்  

வரிவிலக்கு:

வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகைகளைப் பெறும்போது, ​​கூடுதல் வரிகளை தவிர்க்க முதலீட்டாளர்களுக்கு சேமிப்புச் சான்றிதழ்கள் பொருத்தமானவை என்று பல நிதித் ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். தேசிய சேமிப்புச் சான்றிதழ் வைப்புத்தொகைகள் ஒரு நிதியாண்டின் வரிச் சட்டங்களின்படி,  ரூ. 1.50 லட்சம் வரையில் வரி விலக்கு பெற தகுதியுடையவை ஆகும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Gold Rate: நெருங்கும் தீபாவளி.. மீண்டும் வேலையை காட்டும் தங்கம்.. இன்றைய நிலவரம் என்ன?
Vegetable Price: போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! மீண்டும் உயர்ந்தது காய்கறி விலை! இன்றைய ரேட் நிலவரம்?
Vegetable Price: போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.! மீண்டும் உயர்ந்தது காய்கறி விலை! இன்றைய ரேட் நிலவரம்?
கோயம்பேடு மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
கோயம்பேடு மார்க்கெட்டில் கிடுகிடுவென உயர்ந்த வெங்காயம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
Jio IPO: இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்
இந்திய சந்தையில் புது வரலாறு..! ஜியோ ப்ளாட்ஃபார்ம் IPO பங்குகள் - ரூ.7.4 லட்சம் கோடிக்கு ஏலம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Arrest: அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அன்பில் மகேஸ் கைது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன? பரபரப்பு வீடியோ
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
அக்.31 இல் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்த திமுக! - எதற்காக தெரியுமா?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
நாகை மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் - எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பட்டப்பகலில் திமுக பிரமுகர் ஓட ஓட வெட்டிக் கொலை.. சினிமாவை மிஞ்சிய சம்பவம் - பின்னணியில் என்ன நடந்தது?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
பால்கனியில் இருந்து குட்காவை துப்பிய முதியவர் உயிரிழந்தது எப்படி?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
Cyclone Arnab: 140 கி.மீ. வேகம்! ருத்ரதாண்டவம் ஆடப்போகும் அர்னாப் புயல்.. மழை அதிகரிக்குமா? டெல்டா வெதர்மேன் கூறுவது என்ன?
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை!
15 நாட்களாகியும் கிடைக்காத ஹேமலதா! மயக்க மருந்து தெளித்து கடத்தப்பட்டாரா? 5 ரயில் நிலையங்களில் சிபிசிஐடி விசாரணை! செஞ்சி சிறுமி
"கலெக்டருக்கு இரக்கமே இல்லையா?" - மழையில் நனைந்தபடி சென்ற மாணவர்கள்.. கொந்தளிக்கும் பெற்றோர்கள்!
Embed widget