மேலும் அறிய

இ - வே பில்லை ரத்து செய்யனுமா? அப்போ இந்த 6 விஷயம் கட்டாயம்!

இ-வே பில்கள் என்பவை இந்தியாவினுள் மேற்கொள்ளப்படும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை பதிவு செய்யும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகும்.

இ-வே பில்கள் என்பவை இந்தியாவினுள் மேற்கொள்ளப்படும் சரக்கு போக்குவரத்து குறித்த விவரங்களை பதிவு செய்யும் டிஜிட்டல் ஆவணங்கள் ஆகும். ஏப்ரல் 2018 முதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த மற்றும் தாள் பயன்படுத்தத் தேவையில்லாத இந்த இ-வே பில் நடைமுறையானது சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமலாக்கத்தின் மதிப்பை கூட்டும் வகையில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த போக்குவரத்து அனுமதிச் சீட்டு முறையை மாற்றியமைத்தது.

50,000, ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் கட்டாயம் எனவே நீங்கள் ஒரு வணிக உரிமையாளராக இருந்து பொருட்களின் விற்பனை அல்லது சரக்கு போக்குவரத்தை மேற்கொள்வதாக இருந்தால் அல்லது ஆன்லைன் மார்க்கெட் பிளேஸ் பணி மேற்கொள்பவராக இருந்தால் இந்த ஆவணங்கள் குறித்த நுணுக்கமான தெளிவான புரிதல் உங்களுக்கு இருப்பது மிகவும் அவசியம். 

நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சங்களில் ஒன்றுதான் இ-வே பில் ரத்து நடவடிக்கை.. இ.பில்பில்களை ரத்து செய்யும்போது நீங்கள் நினைவில் கொள்ளவேண்டிய அத்தியாவசியமான விஷயங்களின் பட்டியல் இங்கே.

1. ரத்து செய்வதற்கான கால வரையறை குறித்து புரிந்து கொள்ளுங்கள்.

இ-வே பில்களை ரத்து செய்யும்போது நீங்கள் தவறாமல் நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று, இ பில் ரத்து செய்வதற்காக வழங்கப்பட்ட 24 மணிநேர கால அவகாசம். இந்த வரையறுக்கப்பட்ட கால அளவில் ரத்து செய்யத் தவறினால் அத்தகைய இ-பில்கள் செல்லத்தக்கவைகளாகவே நீடிக்கும். தவிர தணிக்கை அல்லது ஆய்வின் நடைமுறைகளின் போது முரண்பாடுகளை விளைவித்து அபராதம் விதிக்கப்படுவதற்கு இட்டுச் செல்லும். இ-பில் ரத்து செய்யப்படவேண்டியிருந்தால் காலம் தாழ்த்தாதீர்கள் ஏனென்றால் கடைசி நிமிடங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும்/அல்லது ரத்து செய்வதற்கான போர்டல் செயலிழப்பு போன்றவற்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் ரத்து செய்ய முடியாமல் போகும் ஆபத்து இருக்கிறது.

2. ரத்து செய்வதற்கு முன் விவரங்களைச் சரிபார்க்கவும்.

ரத்து செய்யப்படவேண்டிய இ-பில்-க்கு மாறாக தவறுதலாக வேறு ஒரு சரியான இ-.பில் ரத்து செய்யப்படும் ஆபத்தை தவிர்க்கும் பொருட்டு ரத்து செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை நன்றாக சரிபார்க்கவும். தவறான ஒரு இ-பில்லை நீங்கள் ரத்து செய்திருந்தால், அது ஆவணப்படுத்தப்பட்ட விவரங்களுக்கும் உண்மையான சரக்குகளின் விவரங்களுக்கும் இடையில் வித்தியாசத்தை வெளிப்படுத்தி உங்கள் வணிக செயல்பாடுகளின் மீது தேவையற்ற சந்தேகத்தை எழுப்பி ஆய்வுக்கு வழிவகுக்கும். ஒரு ரத்து செய்யப்பட்ட இ -பில்லை மீண்டும் செல்லத்தக்கதாக மாற்ற முடியாது என்பதையும், அத்தகைய சூழ்நிலைகளில் நீங்கள் வேறு ஒரு புதிய இ-பில்லை உருவாக்க வேண்டியிருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

3. அனைத்து பங்குதாரர்களுடனும் ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.

நீங்கள் ஒரு இ-வே பில்லை ரத்து செய்யும்போது, அத்தகைய ரத்து செய்வது குறித்த தகவலை ​​அனைத்து பங்குதாரர்களுக்கும் – குறிப்பாக சரக்குப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தெரிவிக்க மறக்காதீர்கள். அவ்வாறு செய்யத் தவறினால், செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாமலேயே பொருட்கள் அனுப்பப்பட்டுவிடக்கூடும். அதன் காரணமாக இடைவழி நிறுத்தம் மற்றும் தேவையற்ற தண்டக் கட்டண விதிப்புக்களுக்கு வழிவகுக்கும்.

4. ரத்து செய்வதற்கான சரியான காரணத்தை குறிப்பிடவும்.

GST போர்ட்டலில் ஒரு இ-வே பில்லை ரத்து செய்யும்போது, ​​அவ்வாறு ரத்து செய்வதற்கான காரணத்தை நீங்கள் குறிப்பிட வேண்டும். சரியான காரணத்தை தெரிவிப்பது என்பது வெளிப்படைத் தன்மையோடுடனான பதிவேடுகளை பராமரிப்பதற்கும் தணிக்கைகளின் போது எழக்கூடிய சிக்கல்களைத் தவிர்ப்பதற்கும் மிகவும் அவசியம். ரத்து செய்வதற்கான காரணங்கள் ஆர்டர் ரத்து, தவறான தரவுகள் உள்ளிட்டப்பட்டது அல்லது சர்க்கு அனுப்பப்படுவதற்கான திட்டத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற ஏதுவாக இருந்தாலும், ஆய்வுக்கு உட்படுத்தப்படக்கூடிய சாத்தியக் கூறுகளைத் தவிர்க்க அதற்கான உரிய காரணத்தை தெளிவாகப் பதிவு
செய்யவேண்டும்

5. ரத்து நடவடிக்கையை போர்ட்டலில் உறுதிப்படுத்தவும்.

ரத்து செய்வதற்கான கோரிக்கையை சமர்ப்பித்ததோடு நடைமுறைகள் நிறைவு பெற்றுவிட்டது என்று கருத வேண்டாம். அதைத் தொடர்ந்து GST போர்ட்டலில் இ வே பில் நிலை ரத்துசெய்யப்பட்டுவிட்டதா? புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதைச் சரிபார்க்கவும். ஆய்வுகள் அல்லது தணிக்கைகளின் போது முரண்பாடுடன் காணப்படுவதாக கண்டறியப்படும் அத்தகைய எந்த ஒரு செயல்பாட்டிலுள்ள இ பில்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த இந்த சரிபார்த்தால் மிக முக்கியமானது. இந்த நடவடிக்கை தண்டக்கட்டணம் விதிக்கப்படுவதிலிருந்து உங்கள் வணிகத்தை பாதுகாப்பதோடு இணக்கமான பதிவேடுகளை துல்லியமாக பராமரிக்கவும் உதவுகிறது.

6. ரத்து செய்யப்பட்ட இ-வே பில் பதிவேட்டை பாராமரித்து வாருங்கள்.

ரத்து செய்வதற்கான காரணம் மற்றும் GST போர்ட்டலில் அது உறுதி செய்யப்பட்ட விவரங்கள் உட்பட ரத்து செய்யப்பட்ட அனைத்து பில்களின் பதிவேடு ஒன்றை பராமரித்துவாருங்கள் . தணிக்கைகளின் போது இ- வே பில்கள் இடைவிடாத கவனம் செலுத்தப்பட்டு இணக்கமாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான மதிப்பு மிக்க ஆதாரங்களாக இந்த பதிவேடுகள் உதவும். உரிய முறையில் நன்கு பராமரிக்கப்படும் பதிவேடுகள் தணிக்கை நடைமுறைகளை எளிதாக்குகின்றன மற்றும் வரிவிதிப்பு அதிகாரிகள் கேள்விகள் கேட்கும் சந்தர்ப்பங்களில் தேவையான அனைத்து ஆவணங்களும் கைவசம் இருக்கிறது என்ற மன அமைதி இருக்கும்.

முடிவுரை

இ-வே பில்களை எவ்வாறு ரத்து செய்வது என்பது குறித்து சரியாகப் புரிந்து வைத்திருப்பது என்பது GST இணக்கமாக செயல்படுவதோடு லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடுகளை திறம்பட மேலாண்மை செய்யும் ஆற்றலுடன் விளங்குவதின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இந்த ஆறு உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவது, இ-வே பில்களை ரத்து செய்வதில் விளையக் கூடிய சில வழக்கமான தவறுகளை தவிர்க்க உதவும். 

இது ஆய்வுக்குட்படுத்தப்படுதல் மற்றும் அபராதங்களிலிருந்து விடுபட்டு உங்கள் வணிகம் சுதந்திரமாக செயல்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு படிநிலையாக இருக்கக் கூடும் என்பதோடு, வங்கிகள் மற்றும் NBFCs க்கள் போன்ற நிறுவனங்களிடமிருந்து நிதியுதவி பெறுவதை மேலும் எளிதாக்கும்.

பொறுப்புத் துறப்பு

இந்த கட்டுரை விளம்பரதாரர் கட்டுரை ஆகும். ABP மற்றும்/அல்லது ABP LIVE இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை ஆதரிக்கவோ/ குழுசேரவோ இல்லை. மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் மற்றும்/அல்லது மேற்கூறிய கட்டுரையில் கூறப்பட்டுள்ள/குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்கள், கருத்துகள், அறிவிப்புகள், பிரகடனங்கள், உறுதிமொழிகள் போன்றவற்றிற்கு நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பாகவும்/அல்லது பொறுப்பாகவும் இருக்க மாட்டோம். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
அதிகாலையில் சோகம்.! கர்நாடகாவில் கண்டெய்னர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்த பேருந்து; 17 பேர் பலி
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
Embed widget