மேலும் அறிய

HDFC Bank New Rules: எச்டிஎஃப்சி வங்கியில் மாறிய விதிகள் - இனி எல்லாமே கூடுதல் கட்டணம்தான் - வாடிக்கையாளர்கள் ஷாக்

HDFC Bank New Rules: எச்டிஎஃப்சி வங்கியில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டு, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

HDFC Bank New Rules: எச்டிஎஃப்சி வங்கியில் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HDFC வங்கியின் புதிய விதிகள்:

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், அனைத்து துறைகளிலும் சில மாற்றங்கள் இருக்கும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் தொடங்கியுள்ள நிலையில், HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு முக்கிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. நீங்கள் HDFC கிரெடிட் கார்டை பயன்படுத்தினால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் அவசியமானதாக இருக்கும். HDFC வங்கி தனது கிரெடிட் கார்டை (HDFC Bank Credit Card) பயன்படுத்துபவர்களுக்கான விதிகள் மற்றும் கட்டணங்களை மாற்றியுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

பரிவர்த்தனைக்கு 1% கட்டணம்:

மூன்றாம் தரப்பு செயலியான CRED, Paytm, Mobikwik, Freecharge மற்றும் பிறவற்றிலிருந்து HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தினால், பரிவர்த்தனைக்கு 1% கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் அதிகபட்சம் ரூ.3,000 வரை இருக்கும்.

எரிபொருள் செலுத்துவதற்கான விதிகள்

எரிபொருள் நிரப்புவதற்காக HDFC வங்கி கிரெடிட் கார்டு மூலம் நீங்கள் ரூ.15,000க்கு குறைவாக பணம் செலுத்தினால், கூடுதல் கட்டணம் எதுவும் உங்களிடம் விதிக்கப்படாது. ஆனால் குறிப்பிட்ட தொகைக்கு மேலான பரிவர்த்தனைகளுக்கு, மொத்தத் தொகையில் 1% கட்டணம் விதிக்கப்படும். இதன் அதிகபட்ச வரம்பு ரூ.3 ஆயிரம் வரை இருக்கும்.

பிசினஸ் கார்ட் வைத்திருப்பவர்களுக்கான விதிகள்:

நீங்கள் பிசினஸ் கார்டை பயன்படுத்தி, ரூ.30,000க்கும் குறைவான செலவில் பெட்ரோல் நிரப்பும் செலவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் ஒரே நேரத்தில் 30,000 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் நிரப்பினால், மொத்தத் தொகையில் 1% கட்டணம் விதிக்கப்படும்.

பயன்பாட்டு கட்டணம் உயர்வு:

எச்டிஎப்சி கிரெடிட் கார்ட் மூலம் யூட்டிலிட்டி பில்களை செலுத்துவது தொடர்பாகவும் புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மூலம் பயன்பாட்டு பில்களை செலுத்தும் போது, ​​ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. ஆனால் அந்த தொகைக்கு மேல் பணம் செலுத்தினால், ஒரு பேமெண்ட் கட்டணத்திற்கு 1% செலுத்த வேண்டும்.

தாமததத்திற்கான அபராத கட்டணம் மாற்றம்:

கட்டணத்தை தாமதமாக செலுத்தியதற்கான அபராத கட்டமைப்பையும் வங்கி மாற்றியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் 100 ரூபாய்க்கு குறைவான கட்டணத்திற்கு எந்தவித தாமத அபராதமும் செலுத்த வேண்டியதில்லை. அதேநேரம் தாமதமானால்,  ரூ.101 முதல் ரூ.500 வரையிலான கட்டணத்திற்கு ரூ.100ம், ரூ.501 முதல் ரூ.1000 வரையிலான கட்டணத்திற்கு ரூ.500ம், ரூ.1001 முதல் ரூ.5000 வரையிலான கட்டணத்திற்கு ரூ.600ம், ரூ.5001 முதல் ரூ.10,00 வரையிலான கட்டணத்திற்கு ரூ.750ம், ரூ.10,001 முதல் 25,000 வரையிலான கட்டணத்திற்கு ரூ.900ம், ரூ.25001 முதல் ரூ. 50,000 வரையிலான கட்டணத்திற்கு ரூ.1100ம் மற்றும் ரூ.50000க்கு அதிகமான தாமத கட்டணத்திற்கு ரூ.1,300ம் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

கல்வி பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்:

கல்வி பரிவர்த்தனைகள் தொடர்பான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. Cred, Paytm போன்ற மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பணம் செலுத்துவதற்கான கட்டணம் 1% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், கல்லூரி அல்லது பள்ளி இணையதளங்கள் அல்லது அவற்றின் பிஓஎஸ் இயந்திரங்கள் மற்றும் சர்வதேச கல்விக் கட்டணங்கள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ஏதுமில்லை.

ரூ. 50 மீட்பு கட்டணம்:

நீங்கள் ரிவார்டுகளை ஸ்டேட்மென்ட் கிரெடிட் அல்லது கேஷ்பேக்காகப் பயன்படுத்தினால், உங்களிடம் ரூ. 50 ரிடெம்ப்ஷன் கட்டணம் வசூலிக்கப்படும். இருப்பினும், Infinia, Diners Black, Diners Black, BizzBlack Metal, Swiggy HDFC Bank, Flipkart மொத்த விற்பனை கார்டுகளில் ரிவார்டு ரிடெம்ப்க்கு கட்டணம் விதிக்கப்படாது. .

EMI செயலாக்க கட்டணம்:

ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் கடையிலிருந்து Easy-EMI என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்தால், நீங்கள் EMI செயலாக்கக் கட்டணம் ரூ.299 வரை செலுத்த வேண்டும். முன்பு இந்த கட்டணம் ரூ.199 மட்டுமே. மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து சேவைகளுக்குமான ஜிஎஸ்டி என்பது தனியாக செலுத்த வேண்டி இருக்கும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Monkeypox: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS | அடுத்தடுத்த ENCOUNTER நடுங்கும் ரவுடிகள்..அலறவிட்ட அருண் IPSRowdy Kakkathoppu Balaji Profile | டீனேஜில் தடம் மாறிய சிறுவன்..வட சென்னை DON-ஆன கதை!Chennai Rowdy kakkathoppu balaji encounter | ரவுடி பாலாஜி ENCOUNTER! சாட்டையை சுழற்றும் அருண்!Vijay on DMK, ADMK | திமுக எதிரி!அதிமுக குறி! விஜய் மாஸ்டர் ப்ளான்! பெரியார் அரசியல்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Monkeypox:  கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
Monkeypox: கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி.! தமிழ்நாடு எல்லைகளில் முன்னெச்சரிக்கை தீவிரம்
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
”துணை முதல்வர் அறிவிப்பு வருமா?” : அமைச்சர் உதயநிதி ரியாக்‌ஷன் இதுதான்..
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள்  கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Lokesh Kanagaraj : இரண்டு மாத உழைப்பு போச்சு...கூலி பட காட்சிகள் கசிந்தது குறித்து லோகேஷ் கனகராஜ்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
Coolie Scenes Leaked : இணையதளத்தில் கசிந்த கூலி பட காட்சிகள்... நாகர்ஜூனாவின் லுக்கை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்
India Space Station: இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஒப்புதல்..! எப்போது பயன்பாட்டுக்கு வரும் தெரியுமா.?
இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையத்துக்கு ஒப்புதல்..! எப்போது பயன்பாட்டுக்கு வரும் தெரியுமா.?
Brain Surgery and Jr NTR Movie : ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பார்த்தபடி, ரசிகைக்கு மூளை சிகிச்சை.. நடந்தது என்ன?
ஜூனியர் என்.டி.ஆர் படத்தை பார்த்தபடி, ரசிகைக்கு மூளை சிகிச்சை.. நடந்தது என்ன?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
Chandrayaan 4: சந்திராயன் 4 திட்டத்துக்கு ஒப்புதல்: இந்த முறை நிலாவில் என்ன பிளான் தெரியுமா.?
PBKS New Head Coach: பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
பஞ்சாப் கிங்க்ஸின் தலைமைப் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமனம்!
Embed widget