Payment App Rules: கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க மக்கா..
யுபிஐ பயன்படுத்தி பண பரிவர்த்தணை மேற்கொள்ளும் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
![Payment App Rules: கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க மக்கா.. Google Pay, PhonePe, Paytm apps new rules issued payment corporation of India Payment App Rules: கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் செயலிகளுக்கு புதிய கட்டுப்பாடு.. முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க மக்கா..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/14/c370a806e99def4276bb95d36b5d81f11670956273798571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளுக்கு புதிய இரண்டு கட்டுப்பாடுகளை நேசனல் பேமண்ட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
கிராமங்களிலும் செயலிகள்:
இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி பணபரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. கிராமங்களில் கூட பரிவர்த்தனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
இணையத்தில் பொருட்களை வாங்குதல், பண பரிமாற்றம் மேற்கொள்ளுதல், சில்லறை வணிக கடைகளில் கூட பண பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன. இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. ஏடிஎம் வாசலில் கூட மக்கள் நிற்பது, முன்பை விட குறைந்து விட்டது.
தற்போது, நேசனல் பேமண்ட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா, யுபிஐ வழியாக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் செயலிகளுக்கு புதிய விதிகளை விதித்துள்ளது.
image crdits: gpay
முதல் கட்டுப்பாடு:
யுபிஐ வழியாக பண பரிவர்த்தனையில், ஒரு நாளைக்கு ரூ. 25,000 முதல் 1 லட்சம் வரை மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என NPCI நிர்ணயம் செய்துள்ளது . இது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடுகிறது.
எஸ்.பி.ஐ வங்கியின் கணக்கு மூலம் பண பரிவர்த்தணை மேற்கொள்ளும் போது ரூ. 1 லட்சம் வரை மேற்கொள்ளலாம். கனரா வங்கி மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது ரூ. 25,000 வரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டுப்பாடு:
யுபிஐ வழியாக பண பரிவர்த்தனையில், ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 20 முறை வரை மட்டுமே பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என NPCI நிர்ணயம் செய்துள்ளது. இது வங்கிகளுக்கு வங்கிகள் மாறுபடும் எனவும் கூறப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, செயலிகளுக்கு ஏற்ப மாறுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், கூகுள் பே செயலிக்கு அதிகபட்ச வரம்பு 1 லட்சம் வரை உள்ளது. இது, வங்கி கணக்கை பொறுத்து மாறுபடலாம். இதில் ஒரு நாளைக்கு 10 பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போன் பே செயலிக்கு அதிகபட்ச வரம்பு 1 லட்சம் வரை உள்ளது. இது, வங்கி கணக்கை பொறுத்து மாறுபடலாம். இதில் ஒரு நாளைக்கு 10 லிருந்து 20 பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவும் வங்கிகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.
பேடிஎம் செயலிக்கு அதிகபட்ச வரம்பு 1 லட்சம் வரை உள்ளது. இது, வங்கி கணக்கை பொறுத்து மாறுபடலாம். இதில் ஒரு நாளைக்கு 20 பரிவர்த்தனை மட்டுமே மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கு ஏற்பவும் மாறுபடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உங்கள் வங்கி கணக்கை அடிப்படையாக கொண்டு, அதிகபட்சமாக எவ்வளவு பரிமாற்றம் செய்யலாம், எத்தனை முறை பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Also Read:Google pay: இனி ஹிங்கிலீஷில் பணம் அனுப்பலாம் - கூகுள் பே புதிய அப்டேட்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)