Stock Market: ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குச்சந்தை; ரூ.1000-ஐ தொட்ட Happy Forgings ஐ.பி.ஓ.!
Stock Market: பங்குச்சந்தையில் 5 நிறுவனங்களின் ஐ.பி.ஓ. லிஸ்ட் ஆனது.
இந்திய பங்குச்சந்தையில் ’Happy Forgings' நிறுவனத்தின் ஐ.பி.ஓ. (Initial Public offering) விலை ரூ.1000ஐ எட்டியுள்ளது முதலீட்டாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நாள் ஐ.பி.ஓ. சப்ஸ்க்ரைபர்ஸ்களுக்கு நல்ல நாள் என்றே சொல்ல வேண்டும். பங்குச்சந்தையில் ஐந்து நிறுவனங்களின் ஐ.பி.ஓ. லிஸ்ட் ஆகியுள்ளன. சிறு குறு நிறுவனங்களின் பிரிவில் (SME - small and medium-sized enterprises) Happy Forgings,Shanti Spintex , Credo Brands RBZ Jewelers ஆகிய நிறுவனங்களின் ஐ.பி.ஓ. லிஸ்ட் ஆனது. இதில் ஹாப்பி ஃபார்ஜிங்க்ஸ் நிறுவனத்தின் மதிப்பு உயர்வுடனும் RBZ ஜூவல்லர்ஸ் மதிப்பு குறைந்தும் இருந்தன. ஹாப்பி ஃபார்ஜிங்க்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள் இன்று.
ஹாப்பி ஃபார்ஜிங்க்ஸ் (Happy Forgings), எலக்ட்ரோ ஃபோர்ஸ் (Electro Force) உள்ளிட்ட நிறுவனங்களின் ஐ.பி.ஓ. மதிப்பு ரூ.100 வரை உள்ளது. க்ரிடோ ப்ராண்ட் மார்க்கெட்டிங்க்ஸ் (Credo Brands Marketing) நிறுவனத்தின் ஐ.பி.ஓ. ப்ரீமியன் 0.84%. வரை இருந்ததால் முதலீட்டாளர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
- Happy Forgings ஐ.பி.ஓ. பங்கு ப்ரிமீய 17.8% ஆக இருந்தது.
- Electro Force ஐ.பி.ஓ. பங்கின் விலை ரூ.93
- Shanti Spintex-ன் விலை ரூ.76
- RBZ ஜூவல்லர்ஸ் விலை ரூ.100 ஆக இருந்தது.
ஐ.பி.ஓ. என்றால் என்ன?
பங்குச்சந்தைகளில் ஒரு பெரிய நிறுவனம் அல்லது புதிய நிறுவனம் ஆகிய எதுவாக இருந்தாலும் நுழைய வேண்டும் என்றால் அது ஐ.பி.ஓ. என்ற முறை மூலமாக நுழைய முடியும். அதாவது ஐபிஓ என்பது முதல் முறையாக ஒரு நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் விற்பனை செய்யப்படும் முறை. இதன் மூலமாக ஒரு நிறுவனம் தன்னுடைய பங்குகளை முதல் முறையாக மக்களிடம் விற்பனை செய்ய முடியும். ஐ.பி.ஓ. மூலம் அந்த நிறுவனத்தின் பங்குகள் மக்களிடம் விற்பனைக்கு வரும். அதற்கு முன்பு வரை அந்த நிறுவனத்தின் பங்குகள் நிறுவனத்தை தொடங்கியவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இடம் இருக்கும். இந்த அமைப்பில் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை பொதுமக்களுக்கு (டீ-மேட் கணக்கு வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள்) விற்பதன் மூலம் நிதி திரட்டப்படுகிறது.
மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 276.63 அல்லது 0.45 % புள்ளிகள் உயர்ந்து 71,652.99 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 95.40 அல்லது 0.43 % உயர்ந்து 21,533.95 ஆக வர்த்தகமாகியது.