மேலும் அறிய

Gold Silver Price Today: சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது தங்கம் விலை!

தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் இருந்து வந்த நிலையில் சென்னையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் காலை நேர நிலவரப்படி, 22 கேரட் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.1 அதிகரித்து ரூ.4,595க்கும், சவரனுக்கு ரூ.8 அதிகரித்து  ரூ.36,760க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.4,954க்கும், சவரன் ரூ.39,622க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.76.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி ரூ.76,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய தங்கம், வெள்ளி விலை

22 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4594, சவரன் - ரூ.36,752

24 கேரட் தங்கம் ஒரு கிராம் - ரூ.4953, சவரன் - ரூ.39,624

ஒரு கிராம் வெள்ளி - ரூ.76.00

ஒரு கிலோ வெள்ளி - ரூ.76,000 

Gold Silver Price Today: சவரனுக்கு ரூ.8 அதிகரித்தது தங்கம் விலை!

தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், ‛‛பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

மேலும், கொரோனா இரண்டாவது அலை அச்சம் உலகம் முழுவதும் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப் போகும்.  தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன்காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில் தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே‛‛ என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்து நாட்களில் தெரிய வரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - பெங்களூர் வாக்காளர்கள் குஷி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - பெங்களூர் வாக்காளர்கள் குஷி
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vadakan Teaser  : ”பூரா வடக்கனுகளையும் துரத்தனும்”பற்ற வைத்த பாஸ்கர் சக்தி VADAKKAN டீசர் சர்ச்சைIPL 2024 | ”CSK ஜெயிக்கும்..தோல்வியிலிருந்து மீளும்” இந்திய அணி நிரஞ்சனா நம்பிக்கைRathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - பெங்களூர் வாக்காளர்கள் குஷி
Lok sabha Election: குடிமகன்களே! ஓட்டுப்போட்டால் பீர் இலவசம் - பெங்களூர் வாக்காளர்கள் குஷி
கோவையில் மறு தேர்தல்..? -  அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
கோவையில் மறு தேர்தல்..? - அண்ணாமலை ஆதரவாளர்கள் போராட்டம்
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Ship Building Yard Project : “கிடப்பில் கிடக்கும் கப்பல் கட்டும் திட்டம்” கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு..?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Cocaine: நேற்று 28 கோடி இன்று 35 கோடி! தொடரும் போதைப் பொருள் கடத்தல்! என்ன நடக்கிறது சென்னையில்?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Shruti Haasan: காதலரை இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்த ஸ்ருதி ஹாசன்.. சாந்தனு ஹசாரிகாவுடன் ப்ரேக்-அப்பா?
Kerala Lok Sabha Election 2024: கேரளாவில் நாளை  ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல்  பணிகள் தீவிரம்
கேரளாவில் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; தேர்தல் பணிகள் தீவிரம்
திருச்சியில்  680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
திருச்சியில் 680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - உணவு வழங்கல் அதிகாரிகள் நடவடிக்கை
Ghilli Box Office: ரூபாய் 20 கோடியை நெருங்கும் வசூல்! பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கில்லி!
Ghilli Box Office: ரூபாய் 20 கோடியை நெருங்கும் வசூல்! பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கில்லி!
Embed widget