Gold Rate June 27th: அடடா.. தொடர்ந்து குறையும் தங்கம் விலை; இன்றும் கணிசமாக குறைவு - எவ்வளவு தெரியுமா.?
தங்கம் விலை தொடர்ந்து குறைந்து, 72 ஆயிரத்திற்கும் கீழ் வந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் இன்றும் கணிசமான அளவு விலை குறைந்துள்ளது. இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிள நிறது. இன்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து, 72,000 ரூபாய்க்கும் கீழ் வந்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
தொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த திங்கட்கிழமை முதல் குறைந்து வருகிறது. 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு கிராம் தங்கம் 9,235 ரூபாயாகவும், ஒரு சவரன் 73,880 ரூபாயாகவும் இருந்தது.
23-ம் தேதி கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 9,230 ரூபாய்க்கும், ஒரு சவரன் 40 ரூபாய் குறைந்து 73,840 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, 24-ம் தேதி ஒரு கிராமிற்கு 75 ரூபாய் குறைந்து கிராம் 9,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 73,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
25-ம் தேதி கிராமிற்கு 85 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,070 ரூபாயாகவும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,560 ரூபாயாகவும் விற்பனையானது. 26-ம் தேதியான நேற்று அதே விலையில் நீடித்த தங்கம், இன்று விலை குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம் என்ன.?
தங்கம் விலை இன்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் குறைந்து, கிராம் 8,985 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71,880 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
அதே விலையில் நீடிக்கும் வெள்ளி
வெள்ளியின் விலை கடந்த 23-ம் தேதி கிராம் 120 ரூபாயாகவும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகவும் இருந்தது. பின்னர் 24-ம் தேதி வரையில் அதே விலையில் நீடித்தது.
25-ம் தேதி கிராமிற்கு ஒரு ரூபாய் குறைந்து கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று ஒரு ரூபாய் உயர்ந்து, கிராம் விலை மீண்டும் 120 ரூபாயாக மாறியது. இந்நிலையில், இன்றும் ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாயாகவே நீடிக்கிறது.
வெள்ளியின் விலை உச்சத்தில் இருந்தாலும், தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் வரும் நட்களிலும் தங்கத்தின் விலை குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் வேண்டுதலாக இருக்கிறது.





















