மேலும் அறிய
Advertisement
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Digital Marketing Training: தொழில்முனைவோராக ஆர்வம் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மூன்று நாட்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு அரசு.
தொழில் முனைவோர் தொடர்பாகவும், மின்னணு மூலமாக சந்தைப்படுத்துதல் தொடர்பாகவும் 3 நாட்கள் பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பயிற்சி திட்டம் எப்போது, எப்படி விண்ணப்பிப்பது என பார்ப்போம்.
3 நாட்கள் பயிற்சி:
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மதுரையில் "தொழில் முனைவோர் - மின்னணு மூலமாக -சந்தைப்படுத்துதல்' தொடர்பான பயிற்சியானது 03.10.2024 முதல் 05.10.2024 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை இந்நிறுவன பயிற்சியானது மங்கையற்கரசி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், மங்கையற்கரசி நகர், பரவல், மதுரை மாவட்டம் கட்டட வளாகத்தில் நடைபெற உள்ளது.
யார் விண்ணப்பிக்கலாம்?
மின்னணு மூலமாக - சந்தைப்படுத்துதல் பயிற்சியில் முறையாக சந்தைப்படுத்துதல் தொடர்பான நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் (ஆண் / பெண்/ திருநங்கைகள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும்,இப்பயிற்சி பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம். அலுவலக வேலை. நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி / கைபேசி எண்கள்:
93424 92214/90806 09808/96771 52265 என்ற தொலைபேசி மூலமாக முன்பதிவு மற்றும், பயிற்சி தொடர்பான சந்தேகங்களை கேட்டுக் தெரிந்து கொள்ளலாம்.
முன்பதிவு அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion