காலண்டர் விலை உயர்வு: ஜிஎஸ்டி வரி காரணமாக விலை இரட்டிப்பானது!
கடந்த காலங்களில் ஒரு கிலை பேப்பர் ரூ. 65 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ பேப்பர் ரூ. 110 க்கு விற்பனை செய்ப்படுகிறது.
ஜனவரி 1 ந்தேதி 2022 ஆம் ஆங்கிலப்புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் டெய்லி காலெண்டா், மாத காலெண்டா் தயாரிக்கும் பணியில் தொழிலாளா்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். அதனை முன்னிட்டு வருடந்தோறும் புதிய காலண்டா்களை விதவிதமாக அச்சிட்டு தயார் செய்து மொத்தமாக வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இது போன்ற காலெண்டா் தயாரிப்பவா்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 பெரிய நிறுவனங்களும், நடுத்தரமாக 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் உள்ளந. இதில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு நிறுவனத்திலும் சசுமார் 20 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் ஏராளமான பெண்கள் ஆண்கள் தொழில் செய்து வருகின்றனா். இவா்கள் புது வருடம் பிறப்பதற்கே முன்பு, காலெண்டா் உற்பத்தியும், அதன் பிறகு பள்ளி கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் காலங்களில் நோட்டுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். முன்பு ஒரு காலத்தில் காலெண்டா் என்றால் சிவகாசி என்ற பெயரை தற்போது அதே விலைக்கே தஞ்சாவூர் மாவட்டம் என்று பெயரை மாற்றி தற்போது காலெண்டா் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இங்கு தமிழகத்திலிருந்து பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், வா்த்தக நிறுவனங்கள், வணிகா்கள், அரசியல் கட்சி பிரமுகா்கள் என ஏராளமானோர் காலெண்டரை செய்வதற்கு ஆர்டர் கொடுத்துள்ளனர். மேலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தயாரிக்கும் காலெண்டர்களில் டெய்லி சீட் சிவகாசியிலிருந்து வரவழைத்து அச்சிட்டு, காலெண்டா் அட்டைகளை ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டத்திலிருந்து வரவழைத்து அதில் ஆர்டா் கொடுத்தவா்களின் பள்ளியோ அல்லது நிறவனத்தின் பெயரோ அச்சிட்டு அதில் ஒட்டி , பிறகு அதனை நன்றாக கையவைத்து பிறகு டெய்லி சீட்(கேக்) டை சோ்த்து கொடுப்பார்கள். இதே போல் மாத காலெண்டரையும் சிவகாசியிலிருந்து வரவழைத்து , வாடிக்கையாளா்கள் தேவையான வகையில் அச்சிட்டு வழங்குகின்றனர்.
இங்கு தயாரிக்கப்படும் டெய்லி காலண்டரில் தினந்தோறும், நல்ல நேரம், ராகுகாலம், எமகண்டம், குளிகை, திதி, நட்சத்திரம்,அரசு விடுமுறை நாட்கள், விழாக்காலங்கள், பிரபலங்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்கள், இந்து, கிறிஸ்துவா¢கள், முஸ்லீம்கள் பண்டிகை நாட்கள், ராசி பலன்கள், கோயில் விழாக்கள், விவசாயத்திற்கான நாட்கள், மழை பெய்யும் நாட்கள் உள்ளிட்டவைகள் அச்சடித்து வருகின்றோம். இதனால் சாஸ்த்ர சம்பிரதாயங்களை பார்ப்பவா்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும்.
இது குறித்து காலண்டர் தயாரிப்பவர் கூறுகையில்,
இந்நிலையில் மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதால், கடந்த காலங்களில் ஒரு கிலை பேப்பர் ரூ. 65 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ பேப்பர் ரூ. 110 க்கு விற்பனை செய்ப்படுகிறது. இதே போல் ஒரு டன் அட்டை ரூ. 20 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு டன் அட்டை ரூ. 36 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது, இதனால் காலண்டரின் விலை இந்தாண்டு இரண்டு மடங்காக விலை உயர்ந்துள்ளது. காலண்டர் தயாரிக்க தேவைப்படும் அனைத்து மூலப்பொருட்களும் விலை அதிகமாக விலை உயர்ந்துள்ளது.
காலண்டர் தயாரிப்பவர்கள், பிழைப்பு நடத்த வேண்டும் கூலி தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என தமிழகத்திலுள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், தனியார் நிறுவனங்களிடமிருந்து ஆர்டரை வாங்கி விட்டோம். ஆனால் அளவுக்கதிகமாக விலை உயர்வால், கூலி தருவதற்கு கூட பணம் இருக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பால், காலண்டரின் விலையேற்றத்தினாலும், கடந்தாண்டை விட இந்தாண்டு காலண்டரின் உற்பத்தி குறைந்து விட்டது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் காலண்டர் தயாரிக்கும் சுமார் 1000 குடும்பங்கள் நிலை கேள்வி குறியாகியுள்ளது.