மேலும் அறிய
Advertisement
1000 Rs For Ladies: ரூ.1000 வழங்கக்கூடாது, ரூ. 29,000 வழங்கவேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
1000 Rs For Ladies in Tamil Nadu: 28 மாத நிலுவை தொகையுடன் சேர்த்து, குடும்ப தலைவிகளுக்கு ரூ. 29,000 வழங்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2023-24ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த நிதிநிலை அறிக்கையில், மக்கள் பெரிதும் எதிர்பார்த்த குடும்ப தலைவிக்கான ரூ.1000 உரிமை தொகை குறித்தான அறிவிப்பு வெளியானது.
மகளிர் உரிமை தொகை- அண்ணாமலை
இந்நிலையில், இன்று நிதியமைச்சர் தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில், வரும் செப்டம்பர் 15 முதல் தகுதிவாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அமலுக்கு வரும் என அறிவித்தார்.
இந்நிலையில், இத்திட்டம் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது,
ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி.
வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
அதோடு தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல்,தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என அண்ணாமலை தெரிவித்தார்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion