TN Budget 2022: தீயணைப்புத்துறையினருக்கு ரூ.496.52 கோடி ஒதுக்கீடு - பட்ஜெட்டில் அறிவிப்பு
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிககள் துறைக்கு ரூபாய் 496.52 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் 2022 -23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசி வருகிறார். பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிதியமைச்சர், “ தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறைக்கு தமிழக பட்ஜெட்டில் ரூபாய் 496.52 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று அறிவித்தார். மேலும், வள்ளலார் கால்நடை பாதுகாப்பகங்களுக்கு ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். வானிலை மேம்பாடு பணிகள் ரூபாய் 10 கோடி ஒதுக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

