குழந்தைகளுக்கு ஏற்ற டயப்பர் தேர்வு செய்வது எப்படி?
பொருத்தமான டயப்பரை தேர்வு செய்யாவிட்டால். குழந்தையின் சருமத்தில் அரிப்பு ஏற்படுவது, சிவந்து போவது போன்ற பல பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
டயப்பரை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டியவை
டயப்பரில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியது, துவைத்து மீண்டும் பயன்படுத்தக் கூடியது என இரண்டு வகைகள் உண்டு. ஒருமுறை பயன்படுத்தும் வகையே அதிக தேர்வாக இருக்கிறது.
டயப்பர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள துணி, பஞ்சு போன்றவற்றின் தரம் குறித்து ஆராய வேண்டும். ஈரத்தை உறிஞ்சுவதற்காக டயப்பரின் உள்ளே வைக்கப்பட்டிருக்கும் திரவம் பாதுகாப் பானதா என்பதை தெரிந்துகொள்ளவும்.
டயப்பர் அணியும்போது குழந்தைக்கு இறுக்கமாக இல்லாமல், சற்றே தளர்வாக இருக்க வேண்டும்.
ஈரப்பதத்தை முழுவதுமாக உறிஞ்சி, குழந்தையின் சருமத்துக்கு உலர்வான தன்மையை கொடுப்பதே டயப்பரின் முக்கியமான வேலை.
குழந்தையின் சருமத்தில் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும்
மிகவும் அவசியமான நேரத்தில் மட்டும் டயப்பர் பயன்படுத்தலாம்.