Budget 2025: பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் புரிவோருக்கு நற்செய்தி...
Budget 2025: மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறு குறு நிறுவனங்களின் கடன் உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2025-26-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். அதில், சிறு குறு நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அவர் அறிவித்துள்ளார்.
சிறு குறு நிறுவனங்களின் கடன் உச்சவரம்பு அதிகரிப்பு
பட்ஜெட் அறிவிப்பின்படி, சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் உச்சவரம்பு 10 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்க 1.57 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம்
மத்திய பட்ஜெட்டில், சிறு குறு நிறுவனங்களுக்கு 20 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக அளவில் பொம்பை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

