Bank Scheme: மூத்த குடிமக்களா நீங்கள்? அதிக வட்டி வழங்கும் வங்கிகள் - பட்டியல் இதோ!
மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும் நிரந்தர வைப்புத் தொகை திட்டத்தை சில வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. அதன் விவரத்தை கீழே முழுமையாக காணலாம்.
நாட்டு மக்களின் பொருளாதார பாதுகாப்பு பெட்டகமாக இருப்பது வங்கிகள், மக்களின் வயதுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை வித்தியாசமான வட்டி விகிதங்களுடன் வங்கிகள் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்களின் வசதிக்காக பல்வேறு வட்டி விகிதங்களுடன் நிரந்தர வைப்புத் தொகையை வங்கிகள் செயல்படுத்தி வருகிறது.
அந்த வங்கிகள் அவர்களின் திட்டங்களை கீழே காணலாம்.
- ஈகுடாஸ்
ஈகுடாஸ் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான 444 நாள் நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்திற்கு 9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. சிறு நிதி வங்கிகளில் இதுவே அதிகபட்ச வட்டி விகிதம் ஆகும்.
- உஜ்ஜிவன்:
மூத்த குடிமக்களுக்கான சீனியர் சிட்டிசன்களுக்காக உஜ்ஜிவன் சிறு நிதி வங்கி ஓராண்டு நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் எஃப்.டி. செய்யப்படும் தொகைக்கு 8.75 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- பந்தன் வங்கி:
பந்தன் வங்கியானது ஓராண்டு நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்க 8.35 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- இண்டஸ்இண்ட் வங்கி:
நாட்டின் முக்கியமான வங்கிகளில் இண்டஸ்இண்ட் வங்கி முக்கியமானது ஆகும். இந்த வங்கியில் மூத்த குடிமக்களுக்கான ஓராண்டுக்கான நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் 8.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
- டிபிஎஸ் வங்கி:
மூத்த குடிமக்களுக்கான 376 நாள் நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் எஃப்.டி. செயல்படும் தொகைக்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- கரூர் வைஸ்யா வங்கி:
பிரபல வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி மூத்த குடிமக்களுக்கு 444 நாள் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் எஃப்.டி. செய்யப்படும் தொகைக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
- பெடரல் வங்கி:
பெடரல் வங்கி மூத்த குடிமக்களுக்காக 400 நாள் நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை வைக்கப்படும் தொகைகளுக்கு 7.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- கோடக் மகிந்திரா வங்கி:
பிரபல தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகிந்திரா வங்கியில் 390 நாள் கால அவகாசத்தில் மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் 7.9 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
- சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா:
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மூத்த குடிமக்களுக்காக 7.8 சதவீத வட்டி விகிதத்தில் நிரந்தர வைப்புத் தொகை திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் 444 நாள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி:
மூத்த குடிமக்களுக்காக பிரபல வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 நாள் திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இந்த நிரந்தர வைப்புத் தொகை திட்டத்திற்கு 7.8 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.