மேலும் அறிய

Adani Group : வெளிநாட்டில் அலுவலகமா?இல்லவே இல்லை.. திட்டவட்டமாக மறுத்த அதானி குழுமம்

துபாய் அல்லது நியூயார்க்கில் ஒரு குடும்ப அலுவலகம் தொடங்கவிருப்பதாகவும். அதன் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, தொழில் விஸ்தரிப்பு செய்வது ஆகிய வேலைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அதானி வெளிநாட்டில் அதுவும் குறிப்பாக துபாய் அல்லது நியூயார்கில் ஒரு குடும்ப அலுவலகம் தொடங்கவிருப்பதாகவும். அதன் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்குவது, தொழில் விஸ்தரிப்பு செய்வது ஆகிய வேலைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், அந்தத் தகவலை கவுதம் அதானி குழுமம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், கவுதம் அதானிக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ வெளிநாட்டில் அலுவலகம் தொடங்கும் எண்ணம் எள்ளளவும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்தவர் முகேஷ் அம்பானி. தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு, பெட்ரோலியம் என்று பல முக்கியமான துறைகளில் ஆதிக்கம் செலுத்தும் இவருக்கு போட்டியாளராக கவுதம் அதானி வலம் வருகிறார். இந்த சூழலில், இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும், ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற மகுடத்தையும் முகேஷ் அம்பானியிடம் இருந்து கவுதம் அதானி பறித்துள்ளார்.

இந்நிலையில் கவுதம் அதானி தனது குடும்ப அலுவலகத்தை துபாய் அல்லது நியூயார்க்கில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அலுவலகம் அதானி குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்யவும், சொத்துக்கள் வாங்கவும் ஒரு மையப் புள்ளியாக செயல்படும் என்று கூறப்படுகிறது. 

வெளிநாட்டில் அலுவலகம் தொடங்குவதன் மூலம் அயல்நாட்டில் தொழில், முதலீடு ஆதிக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அதானியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கவுதம் அதானி துறைமுகங்கள், சுரங்கங்கள் மற்றும் பசுமை ஆற்றல் ஆகியவற்றில் தனது முதலீடுகளை செலுத்தியுள்ளார். கடந்தாண்டு அதானிக்கு சிறப்பான ஆண்டாக அமைந்தது. நிலக்கரி சுரங்கங்கள் மட்டுமின்றி விமான நிலையங்கள், தரவுகள் மையங்கள், பாதுகாப்பு உள்ளிட்டவற்றிலும் அதானி நிறுவனம் தனது முதலீடுகளை செலுத்தி பன்மடங்கு லாபம் கண்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அதானியின் பங்கு மதிப்பு 600 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது.  இந்தியாவின் மாபெரும் கோடீஸ்வரர்களான அம்பானியும், அதானியும் நிலக்கரியில் தங்களது முதலீடுகளை செய்து வருகின்றனர்.

அதானி தனது குழுவை நேற்று உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளராக மாற்றுவதற்கு 2030ம் ஆண்டுக்குள் மொத்தம் 70 பில்லியன் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளார். கடந்தாண்டு மிகப்பெரிய நிறுவனங்களான டோட்டல் எஸ்.இ., வார்பர்க் பிக்னஸ் எல்.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ப்ரெஞ்ச் ஆயில் நிறுவனம் 20 சதவீத பங்குகளை அதானி பசுமை சக்தி நிறுவனத்தில் வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 12 பில்லியன் மொத்தமாக அதிகரித்துள்ளது. ஆனால், முகேஷ் அம்பானி 2.7 பில்லியன் குறைந்துள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற சாதனையை 235 பில்லியன் சொத்து மதிப்புடன் எலான் மஸ்க் தன் வசம் வைத்துள்ளார். இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையை அமேசான் நிறுவன முன்னாள் எஸ்.இ.ஓ. ஜெப் பெசோஸ் 183 பில்லியன் சொத்துக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  டாப் 5 பட்டியலில் இடம் பெற்றுவிட்ட கவுதம் அதானி 3, 4 இடங்களில் வருவதும் போவதுமாக உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget