மேலும் அறிய

Taigun vs Creta Vs Seltos: ஹுண்டாய் க்ரெட்டா VS கியா செல்டோஸ் VS ஃபோக்ஸ்வாகன் டைகுன்; மிட் சைஸ் SUV-ல் எது பெஸ்ட்.?

Volkswagen Taigun vs Hyundai Creta vs Kia Seltos: இந்தியாவில், மிட் சைஸ் SUV செக்மென்ட்டில் கடும் போட்டி நிலவுகிறது. இதில் கடும் போட்டியாளர்களாக உள்ள ஹுண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்வாகன் டைகுன் ஆகியவற்றில் எது பெஸ்ட்.? பார்க்கலாம்.

இந்திய சந்தையில், நடுத்தர அளவிலான(Mid Size) எஸ்யூவி-க்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், குறிப்பாக ஹுண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் ஃபோக்ஸ்வாகனின் டைகுன் ஆகியவை வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமான மிட் சைஸ் எஸ்யூவி-க்களாக உள்ளன. இவற்றில், விலை, செயல்திறன், அம்சங்கள் அடிப்படையில், எந்த கார் சிறந்தது என்பதை இப்போது அலசுவோம்.

விலை என்ன.?

விலையை பொறுத்தவரை, ஹுண்டாய் க்ரெட்டா 13.48 லட்சம் ரூபாயில் தொடங்கி, டாப் வேரியன்ட்டிற்கு 25.47 லட்சம் ரூபாயை வரை செல்கிறது. கியா செல்டோஸ் 13.65 லட்சம் ரூபாயில் தொடங்கி, டாப் வேரியன்ட் 25.29 லட்சம் ரூபாய் வரை செல்கிறது. இதேபோல், ஃபோக்ஸ்வாகன் டைகுன் விலை 14.19 லட்சம் ரூபாயில் தொடங்கி, டாப் வேரியன்ட்டிற்கு 23.79 லட்சம் ரூபாய் வரை செல்கிறது. விலையின் அடிப்படையில் பார்த்தால், மூன்று கார்களுக்குமே மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனாலும், டைகுனின் தொடக்க விலை மற்ற கார்களை விட சற்று அதிகமாக இருந்தாலும், டாப் வேரியன்ட்டின் விலை மற்ற இரண்டையும் விட கணிசமாக குறைவாகவே உள்ளது.

எஞ்சின் மற்றும் செயல்திறன்

க்ரெட்டா மற்றும் செல்டோஸ் 1.5L MPI பெட்ரோல் எஞ்சினுடன், 113 bhp சக்தியை வழங்குகின்றன. இவற்றில், ஒரு 1.5L டர்போ பெட்ரோலும் எஞ்சின் ஆப்ஷனும் உள்ளது. செல்டோஸ்  பெரும்பாலும் வசதியை மையமாகக் கொண்ட க்ரெட்டாவை விட சற்று கடினமான, அதிக உற்சாகமான சவாரிக்கு பெயர் பெற்றது. டைகுன் 1.0L மற்றும் 1.5L TSI எஞ்சின் ஆப்ஷன்களுடன் வருகிறது. இதில், 1.0 லி எஞ்சின் 113.42 bhp சக்தியையும், 1.5L டிஎஸ்ஐ எஞ்சின் 147 bhp சக்தியையும் வழங்குகிறது. இந்த கார் சிறப்பான செயல்திறன் மற்றும் ஸ்போர்ட்டி ஓட்டுநர் அனுபவத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மைலேஜ் எப்படி.?

மைலேஜை பொறுத்தவரை, க்ரெட்டா பெட்ரோல் சிவிடி எஞ்சின் நகரத்தில் லிட்டருக்கு 11 முதல் 12 கிலோ மீட்டரும், நீண்ட தூர பயணங்களின்போது 15 கிமீ வரையிலும் மைலேஜை வழங்குகிறது. இதன் டீசல் பதிப்பு லிட்டருக்கு 21.8 கிமீ வரை மைலேஜை வழங்குகிறது.

செல்டோஸ்  க்ரெட்டாவைவிட சற்று குறைவான மைலேஜையே வழங்குகிறது. இது, நகரத்தில் 10.3 கிமீ-ம், நீண்ட தூர பயணங்களின் போது 14.2 கிமீ மைலேஜையும் வழங்குகிறது. 1.5 டீசல் ஐஎம்டி எஞ்சின் 20.7 கிமீ மைலேஜை வழங்குகிறது.

மறுபுறம், டைகுன் 1.0லி பெட்ரோல் எஞ்சின் 19.87 கிமீ (ARAI) மைலேஜை வழங்குகிறது. நிஜ பயன்பாட்டில் 13 முதல் 14 கிமீ வரை வழங்குவதாக கூறப்படுகிறது. எனினும் இது மற்ற இரண்டு கார்களையும் விட அதிகம் தான்.

அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு

அம்சங்களை பொறுத்தவரை, ஹூண்டாய் க்ரெட்டா  மற்றும் கியா செல்டோஸ் பொதுவாக சிறப்பாக பொருத்தப்பட்டவை. டைகுனில் இல்லாத பனோரமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா மற்றும் ADAS போன்ற அம்சங்களை இவை வழங்குகின்றன. டைகுனில் மிகவும் குறைந்தபட்ச, சிம்பிளான கேபின் உள்ளது. ஆனால், க்ரெட்டா மற்றும் செல்டோஸ் ஆடம்பரமானவை.

பாதுகாப்பை பொறுத்தவரை, ஃபோக்ஸ்வாகன் டைகுன் GNCAP-ல் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. மறுபுறம், க்ரெட்டா மற்றும் செல்டோஸ் 3 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளன.

இடவசதி எப்படி.?

ஹுண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் பொதுவாக டைகனை விட நீளமாகவும் அகலமாகவும் இருக்கும். இதில், க்ரெட்டா மிகவும் வசதியான, மென்மையான இருக்கை வசதியையும், பெரிய எஸ்யூவியைப் போன்ற உணர்வுள்ள கேபினையும் வழங்குகிறது. இது குடும்பங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. டைகுனில் நல்ல கால் இடவசதி உள்ளது. ஆனால் சற்று குறுகலானது, 5 பேரை விட 4 பெரியவர்களுக்கு சிறந்ததாக இருக்கும்.

ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள்

கியா செல்டோஸின் ஃபேஸ்லிஃப்ட் சமீபத்தில் தான் அறிமுகமானது. அதில், வடிவமைப்பு, கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்கள் இம்பெற்றுள்ளன. புதிய K3 பிளாட்பார்மில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஃபோக்ஸ்வாகனின் டைகுன் ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய அப்டேட்டுகளுடன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹுண்டாய் க்ரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் மாடல், அதாவது 3-ம் தலைமுறை க்ரெட்டா அடுத்த வருடம் அறிமுகமாக உள்ளது. அதில் இன்னும் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். 

எது சிறந்தது.?

மொத்தத்தில், பாதுகாப்பு, நல்ல கட்டுமானத் தரம் மற்றும்  நல்ல ஓட்டுநர் அனுபவத்தை நீங்கள் பெற விரும்பினால்,  ஃபோக்ஸ்வாகன் டைகுனை தேர்வு செய்யலாம்.

அதே நேரத்தில், சிறந்த வசதி, அம்சங்கள் மற்றும் நிதானமான ஓட்டுநர் அனுபவத்தை நீங்கள் பெற விரும்பினால், ஹுண்டாய் க்ரெட்டாவை தேர்வு செய்யலாம்.

இறுதியாக, ஸ்டைல், அம்சங்கள், செயல்திறன் மற்றும் லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களை நீங்கள் விரும்பினால், கியா செல்டோஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
Super Splendor XTEC 2.0: வாரே வா.! 72 கிமீ மைலேஜ்; ப்ரீமியம் அம்சங்கள்; அறிமுகமான புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0
வாரே வா.! 72 கிமீ மைலேஜ்; ப்ரீமியம் அம்சங்கள்; அறிமுகமான புதிய ஹீரோ சூப்பர் ஸ்ப்ளெண்டர் XTEC 2.0
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
70 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அசத்தலான 6 பைக்குகள்! பெட்ரோல் விக்குற விலையில இதான் பெஸ்ட்!
Maruti Victoris CNG Review: Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
Fuel விலை கூடுதேன்னு கவலைப்படாதீங்க, காப்பாத்த ஒரு கார் இருக்கு.! மாருதி விக்டோரிஸ் CNG ரிவ்யூவ்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்
10 நிமிட MEETING 4 முக்கிய கோரிக்கைகள் மோடியுடன் முதல்வர் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
TVK: அடுத்தடுத்து இணையும் அதிமுக கேங்! அப்செட்டில் தவெக பாய்ஸ்! வருங்காலத்தில் சீட் கிடைக்காதோ?
"தி.மு.க.க்கு எதிராகவே எங்கள் அரசியல்” – கோவையில் எஸ்.பி. வேலுமணி ஓப்பன் டாக்...
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
லாஸ்ட் சான்ஸ்… நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற காலக்கெடு நீட்டிப்பு: என்டிஏ அறிவிப்பு
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
CM Vijay Delhi Visit: முதலமைச்சர் விஜய்யின் டெல்லி பயணம் தோல்வியா? அடுத்தடுத்து ரத்தான சந்திப்புகள்!
Honda New Cars: டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்; முழு விவரம்
டாடா, ஹூண்டாய்க்கு நேரடி சவால்.! புதிய EV, ப்ரீமியம் கார்களை இறக்க ஹோண்டா திட்டம்
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
IPL 2026: பைனலுக்கு போறது யாரு? சண்டிகரில் சண்டை செய்யப்போகும் ராஜஸ்தான் - குஜராத்! சம்பவம் இருக்கு!
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கையை உடனே திணிப்பதா? எழும் எதிர்ப்புகள்- என்னென்ன பிரச்சினைகள்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
அடிப்படை வசதி இல்லை.. மகளிர் உரிமைத்தொகை இல்லை! மண்திட்டு கிராம மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவாரா விஜய்?
Embed widget